I


452திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     (இ - ள்.) ஏடுவாய் முளரியான் மால் ஏனை வானவரும் - இதழ்கள்
வாய்ந்த தாமரை மலரில் வசிப்போனாகிய பிரமனும் திருமாலும் மற்றைத்
தேவர்களும், தத்தம் நாட்டு வாழ் பதியில் செல்ல - தங்கள் தங்கள்
நாடுகளாகிய செல்வமிக்க பதவிகளிற் செல்லுமாறு, நல்விடை கொடுத்து -
அருள் விடை கொடுத்து, வேந்தர்க்கு - மன்னர்களுக்கு, ஆட்டுவான் ஆடிக்
காட்டும் தன்மை போல் - ஆட்டுவிப்பானொருவன் தான் முன்னர் ஆடிக்
காட்டுந் தன்மையைப் போல, அரசு செய்து காட்டுவானாகி -
செங்கோலோச்சிக் காட்டுவானாய், ஐயன் - இறைவன், திருவுளக் கருணை
பூத்தான் - திருவுளங் கொண்டருளினான் எ - று.

     ஏடு, நாடு என்பன விரித்தல் விகாரம் பெற்றன. நாட்டிலுள்ள பதியுமாம்.
நல் விடை - அருள் விடை. நாட்டியம் ஆட்டுவிப்பான் ஆடு
முறைமையுணர்த்துதலன்றித் தான் ஆடிக் காட்டுதலும் இன்றியமையாமை
போல இறைவன் உயிர்களறிந் தொழுகற் பாலவற்றை வேத முதலியவற்றால்
உணர்த்தியிருப்பினும் தாமே வந்தொழுகிக் காட்டுதலும் இன்றியமையாத
தென்பார் 'ஆடிக்காட்டுந் தன்மை போல் அரசு செய்து காட்டுவானாகி'
என்றார். செய்விப்பான் செய்து காட்டினானென்க. (193)

[எழுசீரடியாசிரியவிருத்தம்]
அதிர்விடைக் கொடியங் கயற்கொடி யாக
     வராக்கலன் பொற்கல னாகப்
பொதியவிழ் கடுக்கை வேம்பல ராகப்
     புலியதள் பொலந்துகி லாக
மதிமுடி வைர மணிமுடி யாக
     மறைகிடந் தலம்புமா மதுரைப்
பதியுறை சோம சுந்தரக் கடவுள்
     பாண்டிய னாகிவீற் றிருந்தான்.

     (இ - ள்.) அதிர்விடைக் கொடி அம் கயல் கொடி ஆக - ஒலிக்கும்
இடபக்கொடி அழகிய மீனக் கொடியாகவும், அராக்கலன் பொன்கலன் ஆக
- பாம்பணிகள் பொன்னணிகளாகவும், பொதி அவிழ் கடுக்கை வேம்பு அலர்
ஆக - இதழ் விரிந்த கொன்றை மலர் மாலை வேப்பம்பூ மாலையாகவும்,
புலி அதள் பொலம் துகில் ஆக - புலித்தோல் ஆடை பொன்னாடையாகவும், மதி முடி வைர மணிமுடி ஆக - சந்திரனை அணிந்த சடாமுடி அழகிய
வைர முடியாகவும், மறை கிடந்து அலம்பும் மாமதுஐரப் பதி உறை -
வேதங்கள் தங்கி ஒலிக்கின்ற பெரிய மதுரைப் பதியில் வீற்றிருக்கும்,
சோமசுந்தரக் கடவுள் பாண்டியனாகி வீற்றிருந்தான் - சோமசுந்தரக் கடவுள்
சுந்தர பாண்டியனாய் வீற்றிருந்தருளினான் எ - று.

     சிவபெருமான் பாண்யனாகக் கோலங் கொண்டதற்கேற்ப அவனுடைய
விடைக்கொடி முதலியனவே கயற்கொடி முதலியனவாக உருமாறின என்றார்.
இறைவன் திருக்கயிலையினின்று வழிக் கொண்டு வந்தானாயினும் அவன்
என்றும் மதுரையிலிருப்பவனேயென்பார் 'மதுரைப் பதியுறை சோமசுந்தரக்
கடவுள்' என்றார்; மேல் 45-ஆம் செய்யுளில்,