I


புராண வரலாறு147



புராணம்; பிரம கைவர்த்தம் சூரிய புராணம். சிவனது தலைமை கூறும்
தேவாரப் பதிகத்திற்குத் 'தசபுராணம்' என்று பெயரிட்டிருப்பது சிவபுராணம்
பத்தென்பதனைக் காட்டும். சொற்றவர் என்பதனை வழக்கு நோக்கிச்
'சொற்றபேர்' என்றார். மா : இசை நிறையுமாம்.

இன்ன வாறனுட் சங்கர சங்கிதை யென்று
சொன்ன நூலினை யுணர்த்தினான் சங்கரன் றுணைவிக்
கன்ன போதவள் மடியினி லிருந்துகேட் டதனை
மின்னு வேல்பணி கொண்டவேள் வெளிப்பட வுணர்ந்தான்.

     (இ - ள்.) இன்ன ஆறனுள் - இந்த ஆறு சங்கிதைகளுள், சங்கர
சங்கிதை என்று சொன்ன நூலினை - சங்கர சங்கிதை என்று சொல்லப்பட்ட
நூலை, சங்கரன் துணைவிக்கு உணர்த்தினான் - சிவபெருமான்
உமையம்மைாருக்கு அறிவித் தருளினான்; அன்னபோது - அப்போது,
அவள் மடியினில் - அவ்வம்மையின் திருமடியின்கண், மின்னு வேல் -
விளங்கிய வேற்படையை, பணி கொண்ட வேள் - ஏவல் கொண்ட
குமரவேள், இருந்து கேட்டு - வீற்றிருந்து கேட்டு, அதனை - அச்சங்கர
சங்கிதையை, வெளிப்பட உணர்ந்தான் - செவ்விதாக உணர்ந்தான் எ - று.

     சங்கிதை - தொகுதியென்னும் பொருளுள்ள வடசொற் சிதைவு. மடி
- மடக்கிய கவான். இன் : சாரியை. வெளிப்பட வுணர்தல் - தெளிய
வுணர்தல். (14)

குன்றெ றிந்தவேள் வழிபடு குறுமுனிக் குரைத்தான்
அன்று தொட்டஃ தகத்திய சங்கிதை யாகி
நின்ற தன்னது கேட்பவர்க் கரனடி நீழல்
ஒன்று மின்பவீ டளிப்பதா வொருதல னுரைக்கும்.

     (இ - ள்.) குன்று எறிந்த வேள் - கிரவுஞ்ச மலையைப் பிளந்த
குமரவேள், வழிபடு குறுமுனிக்கு உரைத்தான் - தன்னை வழிபடா நின்ற
அகத்திய முனிவனுக்குக் கூறியருளினான்; அன்று தொட்டு - அந்நாள்
தொடங்கி, அஃது - அச்சங்கர சங்கிதையானது, அகத்திய சங்கிதை ஆகி
நின்றது - அகத்திய சங்கிதை எனப் பெயருடையதாகி நிலை பெற்றது;
அன்னது - அச்சங்கிதைதான், கேட்பவர்க்கு - கேட்கின்றவர்களுக்கு,
அரன் அடி நீழல் - இறைவன் திருவடிநீழலில், ஒன்றும் - இரண்டறக்
கலத்தலாகிய, இன்ப வீடு - பேரின்ப வீட்டினை, அளிப்பதா - கொடுக்கத்
தக்கதாக, ஒருதலன் உரைக்கும் - ஓர் திருப்பதியைக் கூறாநிற்கும் எ - று.

      நீழல் : நீட்டல் விகாரம். ஒன்றும் என்பது தொழிற்பெயர்த்
தன்மைப்பட்டு நின்றது. (15)

அதிக வப்பதி னாலவாய் கேட்கக்
கதிய ளிப்பதென் றோதிய சூதனைக் கதியின்
மதியை வைத்தவ ரன்னதைப் பகரென வந்த
விதியி னிற்புகல் கின்றனன் வியாதன்மா ணாக்கன்.