I


148திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     (இ - ள்.) அதிக அப்பதி யாது எனில் - சிறந்த அத்திருப்பதி
யாதென்று வினவில், ஆலவாய் - திருவாலவாயாம்; கேட்கக் கதி அளிப்பது
என்று ஓதிய - கேட்ட அளவில் வீட்டை அளிக்கவல்லது என்று கூறிய,
சூதனை - சூதமுனிவனை, கதியில் மதியை வைத்தவர் - வீட்டுலகிற்
கருத்தைச் செலுத்திய முனிவர்கள், அன்னதைப் பகர் என - அத்திருப்
பதியின் பெருமையைக் கூறியருள வேண்டுமென, வந்த விதியினில் -
(தொன்று தொட்டுக் கூறி) வந்த முறையினால், வியாதன் மாணாக்கன்
புகல்கின்றனன் - வியாதமுனியின் மாணவனாகிய சூதமுனிவன் சொல்லா
நின்றான் எ - று.

     அதிகம் மேம்பாடு. தலனொன்று புகலாய் என்றபோது என்று ஓதிய
சூதனை, என மேற் பதினொன்று பன்னிரண்டாஞ் செய்யுட்களோடு சேர்த்து
முடிக்க. அன்னதைப் பகர் என - அதன் பெருமையை விரித்துரைக்கவென.
(16)

புதிய தாமரை மேவிய பழமறைப் புத்தேள்
விதியி னாற்கடு நடைப்பரி மகஞ் செய்வான் வேண்டிக்
கதியை மாய்ந்தவர்க் குதவுதண் டுறைகெழு காசிப்
பதியின் மைந்தரோ டெய்தினான் பண்டொரு வைகல்.

     (இ - ள்.) புதிய தாமரை மேவிய - வாடாத தாமரை மலரில்
உறையும், பழமறைப் புத்தேள் - பழைய வேதங்களை யுணர்ந்த பிரம
தேவன், விதியினால் - அவ் வேத விதிப்படி, கடுநடைப் பரிமகம் செய்வான்
- விரைந்த நடையினையுயடைய துரகவேள்வி செய்தற்கு, வேண்டி -
விரும்பி, மாய்ந்தவர்க்கு - (தன்னிடத்து வந்து) இறந்தவருக்கு, கதியை
உதவு - வீட்டுலகைத் தருகின்ற, தண் துறைகெழு - குளிர்ந்த நீர்த்துறைகள்
பொருந்திய, காசிப்பதியில் - காசி என்னுந் திருப்பதியின் கண், பண்டு ஒரு
வைகல் - முன்னொரு காலத்தில், மைந்தரோடு எய்தினான் - புதல்வர்
களோடு சென்றான் எ - று.

     புதிய தாமரை பழமறை என்றது முரண். பரிமகம் - அசுவ மேதம்
எனப்படும் வேள்வி. துறை - கங்கையின் நீர்த்துறை. காசியில் மரித்தவர்
வீடெய்துவ ரென்ப. செய்வான் : வானீற்று வினையெச்சம்.

      [எழுசீரடியாசிரியவிருத்தம்]
அகத்தியன் வியாத னாரதன் சனக
     னாதிநான் முனிவர்கோ தமனூற்
சிகைத்தெளி வுணர்ந்த பராசரன் வாம
     தேவன்வான் மீகியே வசிட்டன்
சகத்தியல் கடந்த சுகன்முதன் முனிவர்
     தம்மொடும் பத்துவெம் பரிமா
மகத்தொழின் முடித்து மற்றவர்க் குள்ள
     மகிழ்வுற வழஙகுந வழங்கா.

     (இ - ள்.) அகத்தியன் வியாதன் நாரதன் - அகத்தியனும் வியாதனும்
நாரதனும், சனகன் ஆதி நால்முனிவர் - சனகன் முதலிய நான்கு