முனிவர்களும், கோதமன்
- கௌதமனும், நூல் சிகைத் தெளிவு உணர்ந்த
பராசரன் - மறை முடிவின் றுணிபொருளாகிய பரசிவத்தை உணர்ந்த
பராசரனும், வாமதேவன் வான்மீகி வசிட்டன் - வாமதேவனும்வான் மீகியும்
வசிட்டனும், சகத்து இயல் கடந்தசுகன் - உலகியலைக் கடந்த சுகனும்,
முதல் முனிவர் தம்மொடும் - முதலாகிய முனிவர்களோடும், பத்து
வெம்பரிமா மகத்தொழில் முடித்து - பத்தாகிய கூடிய நடையினையுடைய
வரிவேள்வி வினைகளை முடித்து, அவர்க்கு - அம் முனிவர்களுக்கு,
உள்ளம் மகிழ்வு உற - உளளம் மகிழ்ச்சி பொருந்த, வழங்குந வழங்கா -
வழங்கத் தக்கவைகளை வழங்கி எ - று.
நூல்
என்றது ஈண்டு வேதத்தை. பிறந்தது தொட்டே உலக மாயையாற்
பற்றப்படாதவ னென்பார் 'சகத்தியல் கடந்த சுகன்' என்றார். பரிமர :
இருபெயரொட்டு; மா - பெருமை யெனலுமாம். மற்று : வினைமாற்று.
வழங்குந - தக்கிணை : வினைப்பெயர். (18)
சத்திய வுலகிற் சரோருகக் கிழவன்
சார்ந்தபின் புலப்பகை சாய்த்த
அத்திரு முனிவ ரனைவருங் காசி
யடிகளை யடைந்தனர் பணிந்து
முத்திமண் டபத்தி னறமுத னான்கு
மொழிந்தருள் மூர்த்திசந் நிதியில்
பத்தியா யிருந்து நாரத முனியைப்
பார்த்தொரு வினாவுரை பகர்வார். |
(இ
- ள்.) சரோருகக் கிழவன் - தாமரை மலருக் குரியவனாகிய
அயன், சத்திய உலகில் சார்ந்தபின் - சத்திய உலகை அடைந்தபின்,
புலப்பகை சாய்த்த - புலன்களாகிய பகையைக் கெடுத்த, அத்திரு முனிவர்
அனைவரும் - அச்சிறந்த முனிவர்களனைவரும், காசி அடிகளை
அடைந்தனர் பணிந்து - காசிப்பதியில் வீற்றிருக்கும் இறைவனை யடைந்து
வணங்கி, முத்தி மண்டபத்தில் - முத்தி மண்டபத்தின்கண், அறம் முதல்
நான்கும் - அறமுதலிய நான்கனையும், மொழிந்தருள் மூர்த்தி சந்நிதியில் -
(சனகாதி நால்வருக்கும்) உபதேசித்தருளிய தட்சிணா மூர்த்தி திருமுன்னே,
பத்தியாய் இருந்து - அன்போடு அமர்ந்து, நாரத முனியைப் பார்த்து -
நாரத முனிவரை நோக்கி, ஒரு வினா உரை பகர்வார் - ஓர் வினா நிகழ்த்துவாராயினார்
எ - று.
சத்திய
வுலகம் - பிரமனுலகு. அடைந்தனர் : வினையெச்சமுற்று.
முத்தி மண்டபம் - பெயர். அறமுதல் நான்கு - அறம் பொருள் இன்பம்
வீடு. வினா வுரை - வினாவாகிய உரை. (19)
தலமுதன் மூன்றுஞ் சிறந்ததோர் சைவத்
தலமுரை யென்னநா ரதன்றான்
கலைமுழு துணர்ந்த சனற்குமா ரன்பாற்
கற்றவன் வியாதனா மவன்பால் |
|