I


150திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



நலமுறக் கேண்மி னெனவவன் கதிர்வே
     னம்பிபான் மறைமுத லனைத்தும்
அலைவற* வுணர்ந்தோன் குறுமுனி யாகு
     மவனிடைக் கேண்மென விடுத்தான்.

     (இ - ள்.) தலம் மூன்றும் - தலமுதலிய மூன்றினாலும், சிறந்தது
ஓர் சைவத்தலம் உரை என்ன - சிறந்ததாகிய ஒரு சிவதலத்தைக்
கூறுவாயென்று வினவ, நாரதன் - நாரதமுனிவன், கலைமுழுது உணர்ந்த
சனற்குமாரன் பால் - கலைகள் அனைத்தையும் உணர்ந்த சனற் குமார
முனிவரிடத்து, கற்றவன் வியாதன் ஆம் - கற்றுணர்ந்தவன் வியாத
முனிவனாகும், அவன் பால் நலம் உறக் கேண்மின் என - அவனிடத்து
நன்மை பெருகக் கேளுங்கள் என்று கூற, அவன் - அவ்வியாதமுனிவன்,
கதிர்வேல்நம்பிபால் - ஒளியினையுடைய வேற்படையை யுடைய
முருகவேளிடத்து, மறைமுதல் அனைத்தும் - வேதமுதலிய எல்லாக்
கலைகளையும், அலைவு அற உணர்ந்தோன் - ஐயமறக் கற்றுணர்ந்தவன்,
குறுமுனி ஆகும் - அகத்திய முனிவனாகும், அவனிடைக் கேண்ம் என
விடுத்தான் - அவனிடத்துக் கேளுங்கள் என்று ஏவினான் எ - று.

     வியாயதனாமாகலின், குறுமுனியாயகுமாதலின் என விரித்துக்
கொள்க. கேண்மினென என்றதன்பின் அவர் கேட்க என்பது தொக்கு
நின்றது. அலைவு - அசைவு; ஐயம். கேண்மென - கேளுமென : கேளும்
என்பதன் ஈற்றயலுகரங் கெட்டது; 'செய்யுமெனெச்சவீற்று' என்னும் நன்னூற்
சூத்திரங் காண்க. விடுத்தல் - விடை கூறுதலுமாம். (20)

மலயமா தவனை யடைந்துகை தொழுது
     வாழ்த்திவா தாவிவில் வலனைக்
கொலைபுரி தரும மூர்த்தியே விந்தக்
     குன்றடக கியதவக் குன்றே
அலைகடல் குடித்த வருட்பெருங் கடலே
     யருந்தமிழ்க் கொண்டலே தென்பார்
துலைபெற நிறுத்த களைகணே யென்று
     சுருதியா யிரமெனத் துதித்தார்.

     (இ - ள்.) மலயம் மாதவனை அடைந்து - பொதியின் மலையை
யுடைய பெரிய குறுமுனியை அடைந்து, கைதொழுது வாழ்த்தி - கை கூப்பி
வணங்கித் துதித்து, வாதாவி வில்வலனை - வாதாவி வில்வல னென்ற
அசுரர்களை, கொலை புரி தரும மூர்த்தியே - கொன்றருளிய
அறவடிவானவனே, விந்தக் குன்று அடக்கிய - விந்த மலையை அடக்கிய,
தவக்குன்றே - தவமலையே, அலைகடல் குடித்த - அலைதலையுடைய
கடலைப் பருகிய, அருள் பெருங் கடலே - பெரிய கருணைக் கடலே,
அருந் தமிழ்க் கொண்டலே - அரிய தமிழ் சுரக்கு முகிலே, தென்


     (பா - ம்.) *அலமற