மூவகைச் சிறப்பு முள்ளதோர் தான
மொழிகௌ முகமலர்ந் தருள்கூர்ந்
தியாவையு முணர்ந்தோன் முத்திமண்
டபத்தி னீரிரு தொகையின்வந் திறக்குஞ்*
சேவல்க டமையு மைங்கரன் றனையுஞ்
சேவலங் கொடியுடை வடிவேற்
காவலன் றனையுயம் வடநிழ லமர்ந்த
கண்ணுதற் பரனையும் பணியா. |
(இ
- ள்.) மூவகைச் சிறப்பும் - தவம் தீர்த்தம் மூர்த்தி என்னும்
மூன்று வகைச் சிறப்பும், உள்ளது ஓர் தானம் மொழிக என - உடைய தாகி
பதி ஒன்றைக் கூறுவாயென, முகமலர்ந்து - முகமலர்ச்சி கொண்டு, அருள்
கூர்ந்து - கருணை மிகுந்து, யாவையும் உணர்ந்தோன் - எல்லா
நூல்களையும் கற்றுணர்ந்த அகத்திய முனிவன், முத்தி மண்டபத்தின் -
முத்தி மண்டபத்தின்கண் ஈர் இரு தொகையின் வந்து இறக்கும் சேவல்கள்
தமையும் - நான்கு என்னுந் தொகைபெற்று வந்து இறந்த கோழிகளையும்,
ஐங்கரன்தனையும் - ஐந்து திருக்கரங்களையுடைய விநாயகக் கடவுளையும்,
சேவல் அம் கொடி உடை - அழகிய கோழிக் கொடியையுடைய, வடிவேல்
காவலன் தனையும் - கூரிய வேற் படை ஏந்தி முருகவேளைம், வடநிழல்
அமர்ந்த - கல்லாலினிழலில் எழுந்தருளியிருந்த; கண்நுதல் பரனையுயம் -
நெற்றியிற் கண்ணை யுடைய தட்சிணா மூர்த்தியையும், பணியா - வணங்கி
எ - று.
மொழிகென
: தொகுத்தல். கூர்ந்தியாவையும் : குற்றிய லிகரம்.
சேவல்கள் என்றது ஈண்டுக் கோழியென்னும் பொதுப்பெயர் மாத்திரையாய்
நின்றது, சேவலங்கொடி : அம் சாரியையுமாம்.
சேவல்களின்
வரலாறு : மூன்றாம் உகத்திலே காசியிலிருந்து
மாகனந்தன் என்னும் மறையயவன் கொடுந்தொழில் பல புரிந்து, தன்
சுற்றத்தாரால் ஓட்டப்பட்டு, மனைவியோடும், மக்களிருவரோடும் கீகட
தேயம் நோக்கிச் செல்வுழி அந்நால்வரும் வேடர்களாற் கொல்லப்பட்டு
உயிர் துறந்தனர்; இறக்கும் பொழுது காசியை நினைத்தமையால், அவன்
பண்டை யுணர்வுடன் சேவலாகவும், மனைவி பெடையாகவும், மக்களிருவரும்
பார்ப்பாகவும் பிறந்து, காசிக்குச் சென்று முத்தி மண்டபத்தை யடைந்து
முத்தி பெற்றனர் என்பது. இதனைக் காசி காண்டத்து, முத்தி மண்டபத்தின்
கதையுரைத்த அத்தியாயயத்திற் காண்க. (22)
அங்கயற்
கண்ணி தன்னையு மெந்தை
யாலவா யானையு மிதய
பங்கயத் திருத்திச் சமாதியி லிருந்து
பரவச மடைந்துபார்ப் பதிக்குச் |
(பா
- ம்.) *ஈரிரு திசையினுமிருக்கும்.
|