சங்கர னருளிச் செய்தசங் கிதையைத்
தாரக னுடலிரண் டாகச்
செங்கைவேல் விடுத்த சேவகனெனக்குத்
தெருட்டினா னனையசங் கிதையில். |
(இ
- ள்.) அங்கயற் கண்ணி தன்னையும் - அங்கயற்கண்
ணம்மையையும், எந்தை ஆலவாயானையும் - எம் தந்தைாகிய
திருவாலவாயிறைவனையும், இதய - பங்கயத்து இருத்தி - இருதய கமலத்தில்
இருத்தி, சமாதியில் இருந்து - சமாதி கூடி இருந்து, பரவசம் அடைந்து -
பரவசப்பட்டு, பார்ப்பதிக்கு - உமையம்மையாருக்கு, சங்கரன் அருளிச்
செய்த சங்கர சங்கிதையை - சிவபெருமான் அருளிச் செய்த சங்கர
சங்கிதையை, தாரகன் உடல் இரண்டு ஆக - தாருகா சுரன் உடலானது
இருகூறு ஆகும்படியாக, செம் கை வேல்விடுத்த - சிவந்த திருக்கரத்து
வேற்படையை ஏவிய, சேவகன் - வீரனாகிய குமர வேள், எனக்குத்
தெருட்டினான் - எனக்குத் தெளிவுபெற அருளிச் செய்தான்; அனைய
சங்கிதையில் - அந்தச் சங்கிதையில் எ - று.
சமாதியாவது
இறைவனின் வேறாகாது தியானத்தில் - அழுந்தி நிற்பது;
'சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்பது' என்பதனுரையில் 'அதனைக்
காண்கையாவது உயிர்தன் னவிச்சை கெட்டு அதனோடு ஒற்றுமையுற
இடைவிடாது பாவித்தல்; இதனைச் சமாதியெனவும்.... கூறுப' எனப்
பரிமேலழகர் கூறியிருப்பது காண்க. பரவசமடைதல்
- தன்வயமின்றி
யிருத்தல். சமாதியிலிருந்து என்னும் எச்சம் இறுதிச் செய்யுளில்,
உணர்த்துவான் என்பது கொண்டு முடியும்.
சங்கிதையில்
என்பதனை வருஞ் செய்யுளில், ஒன்று கூறப்பட்டுள்ளது
என வருவித்து அதனுடன் முடிக்க. தாரகன் - சூரபன்மன் தம்பி.
தாரகன்
உடலைப் பிளந்த வரலாறு :- முருகக் கடவுளானவர்
தேவர்களின் இடுக்கண் டீர்க்கப் படையுடன் புறப்பட்டுச் சூரபன் மனது
நகர் நோக்கிச் செல்லும் வழியில் கிரவுஞ்சகிரி யெதிர்ப்பட்டது; அப்பொழுது
நாரதர் அங்கு வந்து, கிரவுஞ்சன் என்னும் அசுரன் முனிவர்களுக்கு
இடுக்கண் விளைத்து அகத்திய முனிவராற் சபிக்கப்பட்டு மலையாக
விருத்தலையும், அம் மலையின் ஒருபாலுள்ள மாய நகரத்தில் சூரனுக்
கிளைய தாரகன் வசித்து வருதலையும், மலை வடிவாகிய கிரவுஞ்சனும்,
தாரகனும் புரியும் கொடுமைகளையும் கூறினர்; கிரவுஞ்சனும், அப்பொழுது
குமாரக் கடவுள் தமது வேலினை விடுத்துத் தாரகன் மார்பையும் கிரவுஞ்ச
வெற்பையும் பிளந்தருளினர் என்பது. இதனைக் கந்தபுராணத்து,
தாரகன்
வதைப் படலத்திற் காண்க. (23)
பெறற்கருந் தவஞ்செய் தகந்தெளிந் தரிதிற்
பெறுங்கதி கேட்பவர்க் கெளிதாய்
உறப்படுந் தலநீர் வினாயமுச் சிறப்பு
முள்ளதெத் தலத்தினுங் கழிந்த |
|