I


154திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



சிறப்பினாங் கெண்ணெண் டிருவிளை யாடல்
     செய்தருள் வடிவெடுத் தென்றும்
மறைப்பொருள் விளங்கு மாலவா யதனை
     மண்ணின்மேற் சிவனுல கென்னும்.

     (இ - ள்.) பெறற்கு அருந்தவம் செய்து - பெறுதற்கு அரிய
தவஞ்செய்து, அகம் தெளிந்து - மனந்தெளிந்து, அரிதில் பெறும் -
அரிதாகப் பெறப்படும், கதி - வீடானது, கேட்பவர்க்கு - கேட்கின்ற
வர்களுக்கு, எளிதாய் உறப்படும் தலம் - எளிதாக அடைதற்குரிய
தலமாகவும், நீர் வினாய முச்சிறப்பும் உள்ளது - நீவிர்கேட்ட மூன்று வகைச்
சிறப்புமுள்ளதாகவும் (ஒன்று கூறப்பட்டுள்ளது; அது), எத்தலத்தினும் -
மற்றெந்தத் தலங்களினும், கழிந்த - மேம்பட்ட, சிறப்பின் - சிறப்பினை
யுடைய, மறைப்பொருள் - வேதப்பொருளாகிய இறைவன், அருள் வடிவு
எடுத்து - அருட்டிருமேனி கொண்டு, எண்களைப் புரிந்து, என்றும்
விளங்கும் - எப்பொழுதும் வீற்றிருப்பதற் கிடமாயுள்ள, ஆலவாய் -
திருவாலவாயாகும்; அதனை - அத்திருப்பதியை, மண்ணின் மேல் சிவனுலகு
என்னும் - நிலவுலகிலுள்ள சிவலோகமென்று உலகங் கூறும் எ - று.

     எளிதாய் : எச்சத்திரிபு. வினாவிய என்பது விகாரமாயிற்று. ஒன்று
கூறப்பட்டுள்ளது, அது என்பன வருவிக்கப்பட்டன. கழிந்த : மிகுதிப்
பொருள்தரும் கழியென்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்தது. கழிந்த சிறப்பின்
ஆலவாய் என வியையும். ஆங்கு : அசை. உலகம் என்னும் எழுவாய்
வருவிக்கப்பட்டது. (24)

அத்தலத் தனைய மூவகைச் சிறப்பு
     மளவிலா வுயிர்க்கெலாங் கருணை
வைத்தவன் செய்த திருவிளை யாட்டும்
     வரையுரங் கிழியவே லெடுத்த
வித்தக னெனக்கு விளம்பிய வாறே
     விளம்புவ னுமக்கென வந்த
உத்தம முனிவர் யாவருங் கேட்க
     வுணர்த்துவான் கடலெலா முண்டான்.

     (இ - ள்.) அத்தலத்து - அந்தத் தலத்தின்கண், அனைய மூவகைச்
சிறப்புக்களையும், அளவு இலா உயிர்க்கு எலாம் - அளவிறந்த எல்லா
வுயிர்களிடத்தும், கருணை வைத்தவன் - அருள் வைத்துள்ளவனாகிய
இறைவன், செய்த திருவிளையாட்டும் - செய்தருளிய திருவிளையாடல்
களையும், வரை உரம் கிழிய - கிரவுஞ்ச மலையின் மார்பு கிழியும்படி,
வேல் எடுத்த - வேற்படையை ஏந்திய, வித்தகன் - ஞான சொரூபனாகிய
குமரவேள், உமக்கு விளம்புவன் என - உங்களுக்குக் கூறுவேன் என்று,
கடல் எலாம் உண்டான் - கடல் நீர் முற்றும் பருகிய குறு