I


156திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



தலவிசேடப் படலம்

     [அறுசீரடியாசிரியவிருத்தம்]
நாட்டமொரு மூன்றுடைய நாயகனுக்
     கன்புடையீர் நயந்து நீவிர்
கேட்டதல மீண்டுரைத்த திருவால
     வாயதனுட் கிளைத்துப் பொன்னந்
தோட்டலர்தா மரைமுளைத்த தொருதடமுஞ்
     சுந்தரச்செஞ் சோதி ஞான
ஈட்டமென முளைத்தசிவ லிங்கமொன்று
     முள*வின்னு மிசைப்பக் கேண்மின்.

     (இ - ள்.) நாட்டம் ஒரு மூன்று உடையநாயகனுக்கு - ஒருமூன்று
கண்களையுடைய தலைவனாகிய சிவபெருமானிடத்து, அன்பு உடையீர் -
அன்புடைய முனிவர்களே, நயந்து நீவிர் கேட்ட தலம் - நீங்கள் விரும்பிக்
கேட்ட பதி, ஈண்டு உரைத்த திருவாலவாய் - இப்பொழுது கூறிய
திருவாலவாயாகும், அதனுள் - அப்பதியின்கண், கிளைத்து -நிறைந்து,
பொன் அம் தோடு அலர் - பொன்போலும் அழகிய இதழ்களையுடைய
விரிந்த, தாமரை முளைத்தது - தாமரை முளைக்கப் பெற்றதாகிய, ஒரு
தடமும் - ஓர் தடாகமும், சுந்தரம் - அழகிய, செம் சோதி - சிவந்த
ஒளிவடிவான, ஞான ஈட்டம் என - ஞானத்திரட்சி என்று சொல்லும்படி,
முளைத்த - தோன்றிய, சிவலிங்கம் ஒன்றும் - ஓர் சிவலிங்கமும், உள -
உள்ளன; இன்னும் இசைப்பக் கேண்மின் - இன்னுஞ் சொல்லக் கேளுங்கள்
எ - று.

     நாட்டம், அம் : கருவிப் பெயர் விகுதி. ஒரு மூன்றென்பது
வழக்கு. (1)

திருவால வாய்க்கிணையா மொருதலமுந்
     தெய்வமணஞ் செய்யப் பூத்த
மருவார்பொற் கமலநிகர் தீர்த்தமுத்
     தீர்த்தத்தின் மருங்கின் ஞான
உருவாகி யுறைசோம சுந்தரன்போ
     லிகபரந்தந் துலவா வீடு
தருவானு முப்புவனத் தினுமில்லை
     யுண்மையிது சாற்றின் மன்னோ.

     (இ - ள்.) திருவாலவாய்க்கு இணை ஆம் ஒரு தலமும் - திருவால
வாய்க்கு நிகராகிய ஒரு பதியும், தெய்வமணம் செய்ய - தெய்வ மணம்


     (பா - ம்.) * சிவலிங்கமு மொன்றுள.