மின்னவிரம் பலங்காணக் காசிநகர்
வதிந்திறக்க வியன்கா ளத்திப்
பொன்னகரம் பத்தியினால் வழிபாடு
செயவளிக்கும் போகம் வீடு. |
(இ
- ள்.) அன்னம் மலிவயல் புலியூர் - அன்னப் பறவைகள்
நிறைந்த வயல்களையுடைய சிதம்பரமும், காசி நகர் - காசிப்பதியும்;
காளத்தி - சீகாளத்தியும், ஆலவாய் ஆம் - திருவாலவாயும் ஆகும்; இன்ன
வளம்பதி நான்கில் - இந்த அழகிய திருப்பதி நான்கனுள், திருவாலவாய்
அதிகம் - திருவாலவாயே உயர்ந்தது; எவ்வாறு என்னின் - எப்படி
என்றால், மின் அவிர் - ஒளி விளங்குகின்ற, அம்பலம் காண - சிதம்பரந்
தரிசித்தலானும், காசிநகர் வதிந்து இறக்க - காசிப்பதிதங்கி இறத்தலானும்,
வியன் காளத்தி - பெருமை பொருந்திய சீகாளத்தியாகிய, அன்போடு
வழிபடுதலானும், போகம் வீடு அளிக்கும் - போகத்தையும் வீட்டையுங்
கொடுக்கும் எ - று.
அவையென
வருவித்து ஆம் என்பதனோடு முடிக்க. இன்ன : சுட்டு.
வளம்பதி : மெலித்தல் விகாரம். அம்பலம் முதலியன அளிக்குமென்க.
செயவெனெச்சங்கள் காரணப் பொருளன. எண்ணும்மை விரிக்க. வருஞ்
செய்யுளோடு சேர்த்துப் பொருள் கொள்க. (4)
அறந்தழையுந் திருவால வாய்கேட்ட
வுடன்போக மளிக்கு மீண்டு
பிறந்திறவாப் பேரின்பக் கதியளிக்கு
மிதுவன்றிப் பிறழா தெங்கும்
நிறைந்தபர னெத்தலமும் படைப்பானித்
தலத்தைமுத னிருமித் திங்ஙன்*
உறைந்தருளி னானன்றி யின்னமுள
திதன்பெருமை+ யுரைப்பக் கேண்மின். |
(இ
- ள்.) அறம் தழையும் - அறங்கள் மிகுகின்ற, திருவாலவாய் -
திருவாலவாயானது, கேட்ட உடன் போகம் அளிக்கும் - கேட்ட பொழுதே
போகத்தைக் கொடுக்கும், மீண்டு - பின், பிறந்து இறவாப் பேர் இன்பக்
கதி அளிக்கும் - தோன்றி அழியாத பேரின்ப வீட்டையுங் கொடுக்கும்; இது
அன்றி - இதுவல்லாமல், பிறழாது - தவறாமல், எங்கும் - எவ்விடத்தும்,
நிறைந்தபரன் - நிறைந்துள்ள இறைவன், எத்தலமும் படைப்பான் - எல்லாத்
தலங்களையும் படைக்கும் பொருட்டு, இத் தலத்தை முதல்நிருமித்து -
இத்திருவாலவாயைமுதலிற் படைத்து, இங்ஙன் உறைந்தருளினான் -
இவ்விடத்தில் இருந்தருளினான்; அன்றி - அல்லாமல், இதன் பெருமை
இன்னம் உளது உரைப்பக் கேண்மின் - இதன் பெருமை இன்று முண்டு
சொல்லக் கேளுங்கள் எ - று.
(பா
- ம்.) * அங்கண். +அதன் பெருமை.
|