என்னும்
திருவாசகமும் சிந்திக்கற் பாலது; இறைவன் உலகெலாமாகி
வேறாயுடனுமாய் நிற்பன் என மெய்கண்ட நூல்கள் கூறா நிற்கும்.
இருந்ததனை : வினையாலணையும் பெயர்; தன்னை யெனப் பிரித்தலும்
ஆம். இருந்து காட்டிச் சொல்லாமற் சொல்லுதல் - மோன முத்திரைக்
கையுட னமர்ந்து அருளாலுணர்த்துதல்; "ஒருகை மார்பொடு விளங்க
ஒருகை தாரொடு பொலிய என்னும் திருமுருகாற்றுப்படைத்
தொடருக்கு
முளிவர்க்குத் தத்துவங்களைக் கூறி உரையிறந்த பொருளை யுணர்த்துங்
காலத்து ஒருகை மார்போடே விளங்கா நிற்க, ஒருகை மார்பின் மாலை
தாழ்ந்ததனோடே சேர்ந்து அழகுபெற, இறைவன் மோன முத்திரை
யத்தனாய்த் தானாயே யிருந்து காட்ட ஊமைத்தசும்புள் நீர் நிறைந்தாய்
போல ஆனந்த மயமான வொளி மாணாக்கர்க்கு நிறைதலின் அதற்குரிய
மோன முத்திரை கூறிற்று" என நச்சினார்க்கினியர் உரை
விரித்திருப்பது
இங்கு நோக்கற்பாலது.
"ஓரானீழ லொண்கழ
லிரண்டும்
முப்பொழு தேத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை" |
என்பது திருவெழுகூற்றிருக்கை.
நினையாமல்
நினைந்து - பிறிதொன்றையும் நினையாமல் நினைந்து;
இடையறாது பாவித்து என்றபடி; சிந்திக்கு முறையிற் சிந்தித்து என்றலுமாம்;
அது தற்போதத்தாற் சிந்தியாது திருவருள் வழியாற் சிந்தித்தல் என்பதாம்.
இதனை,
"அறியாமை யறிவகற்றி
யறிவி னுள்ளே
யறிவுதனை
யருளினா லறியாதே யறிந்து
குறியாதே குறித்தந்தக் கரணங்க ளோடுங்
கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாகில்" |
என்னும் சிவஞானசித்தியா
லறிக. மாணிக்கவாசகப் பெருமானும்
நினைப்பற நினைந்தேன் என்றார். ஆலின் கீழிருந்து சிவபெருமானிடத்தில்
மறைப்பொருளைக் கேட்டுணர்ந்த சனகர் முதலிய முனிவர்கள் பின்னரும்
தெளிவு பிறவாராகித் திருக் கைலையை அடைந்து இறைவனை வணங்கி
ஆகமத்தி னரும்பத மூன்றும் கூறப் பெற்றுக் புந்தியொடுங்கும் ஞானத்தைப்
போதிக்க வேண்ட, இறைவன் உரத்திற் சீர்கொள், கரதல மொன்று சேர்த்தி
மோனமுத் திரையைக் காட்டி, ஒருகணஞ் செயலொன் றின்றி யோசெய் வாரி
னுற்றான் என்பது வரலாறு. இதனைக் கந்த புராண
உற்பத்தி காண்டத்து
மேருப்படலத்தாலறிக. (13)
சித்திவிநாயகக்கடவுள்
|
உள்ளமெனுங்
கூடத்தி லூக்கமெனுந்
தறிநிறுவி
யுறுதி யாகத்
தள்ளரிய வன்பென்னுந் தொடர்பூட்டி
யிடைப்படுத்தித்
தறுகட் பாசக் |
|