I


160திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



வையையாகிய சிறந்த ஆறு சூழ்ந்த, திருவாலவாய் - திருவாலவாயானது,
வதிவோர்க்கு சீவன் முத்தி தரும் - வசிப்பவர்களுக்குச் சீவன் முத்தியைக்
கொடுக்கும்; ஈது அதிகம் திரன் - இது மிகுந்த உறுதி, பின் பரகதியும்
கொடுக்கும் - மறுமையில் வீட்டுலகையும் கொடுக்கும், ஆதலின் -
ஆதலால், இச்சீவன் முத்திபுரம் அதிகம் என்பது எவன் - இத்திருவாலவாய்
சிறந்தது என்பது என்னை, எப்புவனத்துள்ளும் - எல்லா உலகத்தின்
கண்ணும், அதற்கு அதுவே ஒப்பு ஆம் - அதற்கு அதுவே நிகர் ஆகும்
எ - று.

     கங்கை வானினின்று வந்தமையால் சுரநதி எனப்பட்டது. வரம் -
மேன்மை. மறுமை - மறுபிறப்பு. இம்மையிலே சீவன் முத்திதரு மென்க;
அதனாற் சீவன் முத்திபுரம் என்பது பெயர். திரன் - ஒருதலை. எவன் -
என்னை; கூறுதல் வேண்டா என்றபடி. 'அதற்கு அதுவே யொப்பு' என்பது
சந்திராலோக முடையாரால் இயைபின்மையணி என்றும், தண்டியலங்கார
முடையாரால் பொதுநீங்குவமை யென்றும் கூறப்படும். (7)

ஆதலினிப் பதிவிட்டுப் பிறபதியிற்
     போய்நோற்போ ரங்கை கொண்ட
சீதளவா னமுதேய்ப்பத் தித்திக்கத்
     தேம்பெய்து செய்த தீம்பால்
ஓதனத்தைக் கைவிட்டுப் புறங்கையை*
     நக்குவா ரொப்ப ரிந்த
மாதலத்தின் பெருமைதனை யாவரே
     யளவிட்டு வழுத்தற் பாலார்.

     (இ - ள்.) ஆதலின் - ஆதலால், இப்பதிவிட்டு - இப்பதியிலிருந்து
தவஞ்செய்தலை ஒழித்து, பிறபதியில் போய் நோற்போர் - வேறு பதிகளிற்
சென்றிருந்து தவஞ்செய்வார், அங்கை கொண்ட - உள்ளங்கையிற் பெற்ற,
சீதளம் - குளிர்ந்த, வான் அமுது ஏய்ப்ப - தேவாமுதத்தை ஒக்க, தித்திக்க
- சுவைதர, தேம் பெய்து செய்த - தேனைச் சொரிந்து செய்த, தீம்பால்
ஓதனத்தை - இனிய பாற்சோற்றை, கைவிட்டு - தவறவிட்டு, புறம்கையை
நக்குவார் ஒப்பார் - புறங்கையை நக்குவாரை ஒப்பார்கள். இந்த
மாதலத்தின் பெருமைதனை - இந்தப் பெருமை பொருந்திய பதியின்
சிறப்பை, அளவட்டு வழுத்தற் பாலார் யாவர் - வரை யறுத்துக் கூறும்
பகுதியையுடையார் யாவர் (ஒருவருமில்லை என்றபடி) எ - று.

     அங்கை - அகங்கை. ஏய்க்குமாறு தித்திக்க வென்க; ஏய்ப்பச் செய்த
வென்னலுமாம். தேன் தேம் எனத் திரிந்தது. புறங்கையை நக்குதல்
பழமொழி. வழுத்தல் - ஈண்டுக் கூறுதலென்னும் பொருட்டு; புகழ்தலுமாம்.


     (பா - ம்.) * முழங்கையை.