மற்றைய தலங்க டம்மிற் பரிமகம் வாச பேயம்
அற்றமில் சோட சாக மக்கினிட் டோமம் யார்க்கும்
முற்றரு மிராச முதன்மக முடித்த பேறுஞ்
செற்றமி றரிச* பூர்ண முதலிட்டி செய்த பேறும். |
(இ
- ள்.) மற்றைய தலங்கள் தம்மில் - பிறபதிகளில், பரிமகம் -
அசுவமேதமும், வாசபேயம் - வாசபேயமும், அற்றம் இல் சோட சாகம் -
குற்றமில்லாத சோடசாகமும், அக்கினிட்டோமம் - அக்கினிட்டோமமும்,
யார்க்கும் முற்று அரும் - எவருக்கும் முடித்தற்கரிய, இராச சூயம் முதல்
மகம் முடித்த பேறும் - இராச சூயமும் முதலிய பல வேள்விகளை
முடித்தலால் வரும் பயனும், செற்றம் இல் - வருத்தமில்லாத, தரிச பூர்ணம்
முதல் இட்டி செய்த பேறும் - தரிச பூர்ணம் முதலிய பல இட்டிகளைச்
செய்தலால் வரும் பயனும் எ - று.
திவாகரத்தினும்
பிங்கலத்தினும் பதினெண் வகை வேள்விகள்
கூறப்பட்டுள. மாற்றரசர்களை வென்று திறைகொண்டு செய்யப்படுவதாகலின்,
'முற்றரு மிராச சூயம்' என்றார். பெருமை சிறுமை நோக்கி மகம் இட்டி
யென வேறு பிரித்தோதினார். தரிசமும் பூர்ணமும் என இரண்டாக்கி
யுரைப்பாரு முளர். முடித்த, செய்த என்னும் பெயரெச்சங்கள்
காரணப்பொருளில் வந்தன. (9)
எள்ளிழு தன்னங் கன்னி யிவுளிதே ரியானை யில்லம்
வெள்ளியான் பொன்பூ ணாடை விளைவொடு பழன முன்னாத்
தள்ளரு மடிமை யாதி தானங்கள் செய்த பேறும்
வள்ளறன் காசி யாதிப் பதிகளில் வதிந்த பேறும். |
(இ
- ள்.) எள் இழுது அன்னம் கன்னி - எள்ளும் நெய்யும் சோறும்
கன்னியும், இவுளி தேர் யானை இல்லம் - குதிரையும் தேரும் யானையும்
வீடும்,வெள்ளி ஆன் பொன் பூண் ஆடை - வெள்ளியும் பசுவும் பொன்னும்
அணிகலனும் ஆடையும், விளைவொடு பழனம் - விளைவோடு கூடிய
வயலும், முன்னா - முதலாகவும், தள் அரும் அடிமை ஆதி - நீக்குதற்
கரிய அடிமை முதலாகவுமுள்ள, தானங்கள் செய்தபேறும் - தானங்களைச்
செய்தலினால் வரும்பயனும், வள்ளல்தன் காசியாதி - சிவபிரான்
எழுந்தருளியிருக்கும் காசி முதலிய, பதிகளில் வதிந்த பேறும் - தலங்களில்
வசித்தலால் வரும் பயனும் எ - று.
எள்ளிழுது
- எண்ணெயுமாம். முன்னா - முதலாக; முன்னித் தள்ளரும்
என உரைப்பாருமுளர். (10)
கங்கைகா
ளிந்தி வாணி காவிரி கண்ண வேணி
துங்கபத் திரிதீம் பாலி தூயதண் பொருநை முன்னாச்
சங்கையி னதிகள் முற்று மாடிய தவத்தின் பேறும்
மங்கல மதுரை தன்னில் வைகலும் வதிவோர்க் கெய்தும். |
(பா
- ம்.) * தெரிச.
|