I


162திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     (இ - ள்.) கங்கை காளிந்தி வாணிகாவிரி கண்ணவேணி -
கங்கையும் காளிந்தியும் சரசுவதியும் காவிரியும் கிருட்டிணையும், துங்கபத்
திரை தீம்பாலி தூயதண் பொருநை முன்னா - துங்கபத்திரையும் இனிய
பாலியும் தூய்மையான குளிர்ந்த தாமிரபன்னியும் முதலாக உள்ள, சங்கை
இல் நதிகள் முற்றும் - அளவிறந்த நதிகள் முழுதினும், ஆடிய தவத்தின்
பேறும் - நீராடிய தவத்தினால் வரும் பயனும் (ஆகிய இவையனைத்தும்),
மங்கலம் மதுரை தன்னில் - நன்மையுடைய மதுரைப்பதியில், வைகலும்
வதிவோர்க்கு எய்தும் - நாள்தோறும் வசிப்பவர்களுக்கு உண்டாகும்
எ - று.

     காளிந்தி - யமுனை. கண்ணவேணி - கிருஷ்ணை; சிதைவு.
தீம்பாலி : பாலிக்கு அடை. நீராடுதல் தாபதப் பக்கத்து ளொன்றாக லின்
'ஆடிய தவம்' என்றார். (11)

அன்னிய தலங்க டம்மி லாற்றிய பிரம கத்தி
பொன்னினைக் களவு செய்தல் கள்ளுண்டல் புனித வாசான்
பன்னியைப் புணர்த லின்ன பாதக மனைத்து மென்றுந்
தன்னிக ரால வாயில் வதிபவர் தமைவிட் டேகும்.

     (இ - ள்.) அன்னிய தலங்கள் தம்மில் - வேறு பதிகளில், ஆற்றிய
- புரிந்த, பிரமகத்தி - பிரமகத்தியும், பொன்னினைக் களவு செய்தல் -
பிறர் பொருளைத் திருடுதலும், கள்ளுண்டல் - கள்ளுண்ணலும், புனித
ஆசான் பன்னியைப் புணர்தல் - தூய்மையான குரவன் மனைவியைக்
கூடதலுமாகிய, இன்ன பாதகம் அனைத்தும் - இந்தப் பாவங்கள் எல்லாம்,
தன் நிகர் ஆலவாயில் - தனக்குத் தானே ஒத்த திருவாலவாயின்கண்,
என்றும் வதிபவர் தமை விட்டு ஏகும் - எந்நாளும் வசிப்பவர்களை விட்டு
நீங்கும் எ - று.

     இச் செய்யுளிற் கூறியவை பெரும் பாதகங்க ளென்பதனை,

"மறையவர்ச் செகுத்தோன் கடிமது நுகர்ந்தோன்
     வயங்குசெம் பொற்கள வாண்டோன்
நிறையருட் குரவன் பன்னியைப் புணர்ந்தோ
     னிகரிலிக் கொடியரை யாரும்
அறைவரான் மாபா தகரென விவரை
     யடுத்தொரு வருடநட் டவரும்
முறைதவிர் மாபா தகர்களே யென்ன
     மொழிவதற் கையமொன் றின்றே"

என்னும் சூதசங்கிதையானு மறிக. இத் தலத்தின் பெருமை கூறுவார்
'வதிபவர் தமை விட்டேகும்' என்றார். (12)

மற்றைய தலத்திற் சாந்தி ராயண மதியந் தோறும்
உற்றபே றிங்குக் கங்கு லுண்டியா லடைபே றாகும்
மற்றைய தலத்தின் மாதப் பட்டினிப் பலத்தின் பேறிங்
குற்றொரு வைக லுண்டி யொழிந்தவர் பெறும்பே றாகும்.