வகைத்து
- து : பகுதிப்பொருள் விகுதியுமாம். பூசையே தவமென்பார்
'பூசைபண்ணிய தவம்' என்றார். (17)
பல்வகைத்
தவங்க ளெல்லா மூற்றிய பயனுந் தூய
பலவகை மந்தி ரத்தி லெய்திய பயனு நூலின்
பல்வகைக் கேள்வி யெல்லா மாய்ந்துணர் பயனும் யோகம்
பல்வகை ஞான மெல்லாம் பயின்றுணர்ந் தடங்கும் பேறும். |
(இ
- ள்.) பல்வகைத்தவங்கள் எல்லாம் - பலவகையான தவங்கள்
முழுதும், முற்றிய பயனும் - செய்து முடித்தலால் வரும் பயன்களும், தூய
- புனிதமான, பல்வகை மந்திரத்தில் எய்திய பயனும் - பலவகையான
மந்திரங்களைச் செபித்தலால் வரும் பயன்களும், பல்வகை - பல்வகையான,
நூலின் கேள்வி எல்லாம் - நூற்பொருள் கேட்டவற்றை யெல்லாம், ஆய்ந்து
உணர் பயனும் - ஆராய்ந்து உணர்ந்ததனால் வரும் பயன்களும், பல்வகை
யோகம் ஞானம் எல்லாம் பயின்று - பலவகையான யோகங்கள்
ஞானங்களெல்லாம் பழகி, உணர்ந்து - மெய்ப்பொருளை யறிந்து, அடங்கும்
பேறும் - தற்போதம் அடங்கியிருத்தலால் வரும் பயன்களும் (ஆகிய
இவையனைத்தையும்) எ - று.
பல்வகை
யோகமும் ஞானமுமெல்லாமென்க. யோகம் பயின்று ஞான
முணர்ந்து என நிரனிறையுமாம். (18)
அனையதொல்
பதியி லென்றும் வைகுவோ ரடைவ ரென்றால்
இனையதொல் பதிக்கு நேர்வே றில்லையிப் பதியின் மேன்மை
தனையறி பவரா ரீசன் றானன்றி * யாத லாலே
வினையைவெல் பவரங் கெய்தி வதிவதே வேண்டு மாதோ. |
(இ
- ள்.) அனைய தொல்பதியில் - அந்தப் பழமையான
ஆலவாயின்கண், என்றும் வைகுவோர் அடைவர் என்றார் - எந்நாளும்
வசிப்போர் அடைவாரென்னின், இனைய தொல்பதிக்கு - இப்படிப் பட்ட
பழம் பதிக்கு, நேர் வேறு இல்லை - ஒப்பு வேறோர் பதியுமில்லை; இப்
பதியின் மேன்மைதனை - அத் தவத்தின் பெருமையை, ஈசன் அன்றி
அறிபவர் ஆர் - சிவபிரானல்லாமல் உணர்ந்தவர் வேறு யாவர்
(எவருமில்லை), ஆதலால் - ஆகையால், வினையை வெல்பவர் - இரு
வினைகளையும் வெல்லக் கருதினோர், அங்கு எய்தி வதிவதே வேண்டும்
- அப் பதிக்குச் சென்று வசித்திருப்பதே வேண்டியதாகும் எ - று.
அடைவரென்றால்
நேர் வேறுண்டோ? இல்லையென்க. ஈசனன்றி
அறிபவர் ஆர் என மாற்றிக் கூட்டுக. ஏ : முன்னது அசை, பின்னது
தேற்றம். மாது, ஓ : அசை. (19)
கைத்தலநான்
கிரண்டுடைய மலர்க்கடவுள்
மேலொருநாட் கயிலை யாதி
எத்தலமு மொருதுலையிட் டித்தலமு
மொருதுலையிட் டிரண்டுந் தூக்க |
(பா
- ம்.) * ஈசனன்றியே, ஈசனென்றறி.
|