சீவன்
முத்தியளித்தலின் சீவன் முத்திபுரம் என்றும், தடாதகைப்
பிராட்டியார் கன்னியாயிருந்து ஆண்டமையியன் கன்னிபுரம் என்றும்,
எல்லா ஞானங்களையும் தருதலின் சமட்டி விச்சாபுரம் என்றும்,
விராட்புருடனுக்கு உச்சிக்குமேற் பன்னிரண்டங்குல முடிவிலுள்ள துவாத
சாந்தமாகக் கொள்ளப்படுதலின் துவாத சாந்தத்தலம் என்றும் பெயர்; பிற
பெயயிரன் வரலாறும் மேல்வருமிடங்களில் ஆண்டாண்டுக் காண்க. சீவன்
முத்தியாவது உடம்போடு கூடியிருந்தே அளத்திற்பட்ட புற்போலப்
பசுகரணமெல்லாம் சிவகரணமாகிச் சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்து
எப்பற்று மின்றிச் சிவ போகந் துய்த்தல். புத்தி யென்றது சிவபோகத்தை. (21)
என்றுதலச்
சிறப்புரைத்த குறுமுனிவ
னெதிரறவோ ரிறும்பூ தெய்தி
நன்றுதலப் பெருமையருள் செய்தனைகேட்
டுடலெடுத்த நயப்பா டெல்லாம்
இன்றடைந்தே மினிச்சுவண புண்டரிகச்
சிறப்பதனை யிசைத்தி யென்னக்
குன்றமடக் கியகருணைக் குன்றனையான்
வரன்முறையாற் கூறு கின்றான். |
(இ
- ள்.) என்று தலச்சிறப்பு உரைத்த - என்று தலவிசேடத்தைக்
கூறிய, குறுமுனிவன் எதிர் - அகத்திய முனிவன் எதிரே, அறவோர்
இறும்பூது எய்தி - முனிவர்கள் வியப்புற்று, தலப்பெருமை நன்று அருள்
செய்தனை - தலச்சிறப்பை நன்கு கூறி யருளினாய், கேட்டு - அதனைக்
கேட்டு, உடல் எடுத்த நயப்பாடு எல்லாம் - உடலை எடுத்ததனால்
அடைய வேண்டிய பயன் முழுதும், இன்று அடைந்தேம் - இப்பொழுதே
அடையப் பெற்றேம்; இனி சுவண புண்டரிகச் சிறப்பதனை - இனிப்
பொற்றாமரைத் தீர்த்தத்தின் விசேடத்தை, இசைத்தி என்ன - கூறியருளுக
என்ன, குன்றம் அடக்கிய - விந்தை மலையை அடக்கிய, கருணைக்குன்று
அனையான் - கருணை மலையை ஒத்தவனாகிய அகத்தியன், வரன்
முறையால் கூறுகின்றான் - வரலாற்று முறைமைப்படி கூறுகின்றான் எ - று.
இறும்பூது
- பெருமை பற்றிய அதிசயம். இனியென்னும் இடைச்சொல்
எதிர்காலங் குறித்தது. சுவணம் - பொன். (22)
விரதமா
தவத்தீர் காணின் வெவ்வினை யெல்லாம் வீட்டிச்
சரதமாப் போக நல்குந் தமனிய* முளரி வந்த
வரவுமக் கனகச் சஞ்சப்+ பெருமையும் வளனு நன்கா
உரைசெய்துங் கேண்மி னென்னா முனிவர னுரைக்கு மன்னோ. |
(இ
- ள்.) விரதம் மாதவத்தீர் - பெரியய தவத்தினை விரதமாகக் கொண்ட
முனிவர்களே, காணின் - தரிசித்தால், சரதமா - உண்மையாக, வெவ்வினை எல்லாம் வீட்டி
- கொடிய வினைகளை எல்லாம
் (பா
- ம்.) * தபனிய. +கனக கஞ்ச.
|