அகளமா யுலகமெல்லா மொடுக்கியந் நெறியே யார்க்கும்
நிகளமாம்* விருத்தி தோன்ற நினைவற நினைந்து நிற்குந்
துகளிலா வறிவா னந்தச் சுந்தரச் சோதி மேனாட்
சகளமா முருவங் கொண்டு தானொரு விளையாட் டாலே. |
(இ
- ள்.) அகளம் ஆய் - நிட்களமாய், உலகம் எல்லாம் ஒடுக்கி -
உலகமனைத்தையும் தன்னுள்ளே ஒடுக்கி, அந்நெறியே - அவ்வொடுக்கிய
முறையாகவே, யார்க்கும் நிகளம் ஆம் விருத்தி தோன்ற - எவர்க்கும்
பாசமாகிய விருத்தி தோன்றுமாறு, நினைவற நினைந்து நிற்கும் - நினைவற
நினைந்து நிற்கின்ற, துகள் இலா - குற்றமில்லாத, அறிவு ஆனந்தச் சுந்தரச்
சோதி - ஞானானந்த ஒளிவடிவாகிய சோம சுந்தரக் கடவுள், மேல் நாள் -
முன்னொரு நாளில், சகளம் ஆம் உருவம் கொண்டு - சகளமாகிய வடிவங்
கொண்டு, ஒரு விளையாட்டால் - ஒரு திருவிளையாட்டினால் எ - று.
அகளம்
- நிட்களம்; அருவமாகிய சிவம், மாயைக்கு ஆதாரமாய்
நிற்றலின் தன்னுள்ளே யொடுக்கி யெனப்பட்டது; மாயையில் ஒடுக்கி
யென்னலுமாம். நிகளம் - தளை; பாசபந்தம். விருத்தி - வியாபாரம்.
நினைவற நினைதல் - சத்தியாற் சங்கற்பித்தல். உயிர்களின் அறிவும்
இன்பமும் துகளுடையன. சகளம் - உருவமுடைத்தாதல்.
"அகளமா யாரு மறிவரி தப்பொருள்
சகளமாய் வந்ததென் றுந்தீபற" |
என்பது காண்க. (3)
முக்கண னரவப் பூண நூலினன் முகிழ்வெண் டிங்கட்
செக்கரஞ் சடையான சூல கபாலத்தன் செங்க ணேற்றன்
மைக்கருங் கயலுண் கண்ணி வாமத்தன் முன்னும் பின்னும்
பக்கமு நந்தி யாதி கணாதிபர் பரவிச் சூழ. |
(இ
- ள்.) முக்கணண் மூன்று கண்களையுடையவனும், அரவப் பூண
நூலினன் - பாம்பாகிய பூணூலையுடையவனும், முகிழ வெண் திங்கள் -
அரும்பிய வெள்ளிய பிறைச்சந்திரனை அணிந்த, செக்கர் அம் சடையான் -
செவ்வானம் போலும் அழகிய சடையை உடையவனும், சூல கபாலத்தன் -
சூலத்தையும் கபாலத்தையு முடையவனும், செங்கண் ஏற்றன் - சிவந்த
கண்களையுடைய இடபத்தையுடையவனும், மை உண் கயல் கருங் கண்ணி -
மை உண்ட கயல் போலும் கரிய கண்களையுடைய உமையம்மையை,
வாமத்தன் - இடப் பாகத்திலுள்ளவனுமாகிய இறைவன், நந்தி ஆதி கண
அதிபர் - நந்தி முதலிய கணத்தலைவர்கள், முன்னும் பின்னும் பக்கமும்
பரவிச் சூழ - முன்னும் பின்னும் பக்கமுமாகிய எங்கும் சூழ்ந்து துதிக்க
எ - று.
பூண
நூல், அ : அசை. மையுண்ட வென்க. பக்கமும் இரு மருங்கும்.
கணாதிபர் : வடமொழி நெடிற் சந்தி. (4)
(பா
- ம்.) * நிகளமாய்.
|