I


172திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



கீழே விழுந்து, பால நேத்திர - நெற்றிக்கண்ணனே, அன்பர்க்கு அன்ப -
அன்பராயினார்க் கன்பனே, நிரஞ்சன - களங்கமற்றவனே, நிருத்தானந்த -
ஆனந்தத் தாண்டவமுடையவனே, சாத்திர முடிவுந் தேறா - சாத்திர
முடிவினாலும தெளியப்படாதஇ தனி முதல் ஒருவ - ஒப்பற்ற முதற்
பொருளாகிய ஒருவனே, என்னா - என்று, தோத்திர வகையால் ஏத்தி -
துதி வகையினாற் புகழ்ந்து, தொழுது - வணஙகி, ஒன்று வினாவல் செய்வார்
- ஒன்று கேட்பாராயினர் எ - று.

     பாலம் - நெற்றி. அஞ்சனம் - களங்கம். ஆனந்த நிருத்த என
மாற்றுக; நிருத்தத்தின் ஆனந்தமுமாம். வடசொற் சந்தி. வீழ்ந்து தொழுது
ஏத்தி வினாவுவரென முடிக்க. (7)

ஐயவிவ் விலிங்க மூர்த்திக் காட்டவு மடியே மூழ்கி
உய்யவுங் கங்கை யாதி நதிகளு முலகத் துள்ளோர்*
மையறு தடாக நீரு மற்றிலை யிருமைப் பேறுஞ்
செய்யவோர் தீர்த்த மிங்குண் டாக்கெனச் செப்ப லோடும்.

     (இ - ள்.) ஐய - தலைவனே, இ இலிங்கமூர்த்திக்கு - இச்
சிவலிங்கப் பெருமானுக்கு, ஆட்டவும் - திருமஞ்சனம் செய்யவும், அடியேம்
மூழ்கி உய்யவும் - அடியேங்கள் நீராடி உய்தி கூடவும், உலகத்துள் -
உலகின் கண், கங்கை ஆதி நதிகளும் - கங்கை முதலிய ஆறுகளும், ஓர்
மையறு தடாக நிரும் இலை - ஓர் குற்றமற்ற தடாக நீரும் இல்லை
(ஆதலால்), இருமைப் பேறும் செய்ய - இம்மை மறுமையாகிய இருமைப்
பயன்களையும் நல்க, இங்கு ஓர் தீர்த்தம் உண்டாக்கு எனச் செப்பலோடும்
- இவ்விடத்து ஓர் தீர்த்தம் ஆக்கிருள வேண்டுமென்று விண்ணப்பித்துக்
கொண்டவுடனே எ-று.

     உலகத்துள்ளோர் குற்றமறுதற்குக் காரணமான என்றுமாம். மற்று :
அசை. (8)

அத்தகை யிலிங்க மூர்த்திக் கடுத்ததென் கீழ்சா ராக
முத்தலை வேலை வாங்கி நாட்டினான் முதுபார் கீண்டு
பைத்தலைப் பாந்தள் வேந்தன் பாதலங் கீண்டு போயெண்
கைத்தலப் பிரம னண்ட கடாகமுங் கீண்ட தவ்வேல்.

     (இ - ள்.) அத்தகை - அத்தன்மையுடைய, இலிங்க மூர்த்திக்கு -
சிவலிங்கப் பெருமானுக்கு, அடுத்த தென் கீழ் சார் ஆக - அடுத்த தென்
கிழக்குப் பக்கத்தில், முத்தலை வேலை வாங்கி நாட்டினான் - மூன்று
தலையையுடைய சூலத்தை எடுத்துக் கீழே ஊன்றினான்; அவ்வேல் -
(ஊன்றப்பெற்ற) அச் சூலமானது, முதுபார்கீண்டு - பழமையாகியநில
வுலகத்தைக் கிழித்து, வைத்தலைப் பாந்தள் வேந்தன் - படம் பொருந்திய
தலைகளையுடைய பாம்புகட்கு அரசனாகிய அனந்தனிருக்கும், பாதலம்
கீண்டு போய் - பாதாலத்தைக் கிழித்துச் சென்று, எண் கைத்தலப் பிரமன்
அண்ட கடாகமும் கீண்டது - எட்டுக் கைகளையுடைய நான் முகனது
அண்ட கடாகத்தையும் ஊடுருவிச் சென்றது எ - று.


     (பா - ம்.) * உலகத்துள்ள.