I


178திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



அன்னநீர் தனிலு மாடி யாலவா யுடைய நாதன்
தன்னையும் பணிவோன் மேலைப் பரகதி தன்னைச் சாரும்
என்னநன் னூலிற்* சொன்ன பவித்திர மெவைக்கு மேலாய்ப்
பன்னரும் புனித+ மான பவித்திர மாகி நிற்கும்.

     (இ - ள்.) அன்ன நீர் தனிலும் - அந்தத் தீர்த்தத்திலும் நீராடி,
ஆலவாய் உடைய நாதன் தன்னையுயம் பணிவோன் - திருவால வாயை
யுடைய சோம சுந்தரக் கடவுளையும் வணங்குவோன், மேலை - மறுமையில்,
பரகதிதன்னைச் சாரும் - மேலான வீடுபேற்றை யடைவன்; என்ன நல்
நூலில் சொன்ன - எப்படிப்பட்ட நல்ல நூல்களில் எடுத்துக் கூறிய,
பவித்திரம் எவைக்கும் மேலாய் - புனிதங்களனைத்திற்கும் சிறந்ததாய், பன்
அரும் புனிதம் ஆன - சொல்லுதற்கரிய தூய்மையான, பவித்திரம் ஆகி
நிற்கும் - புனிதவடிவாடிக நிற்கும் (அத்தீர்த்தம்) எ - று.

     மேலை - பரகதிக்கு அடையுமாம். பரகதி - பரமமுத்தி. தன் :
சாரியை. எல்லா நூலினுமென்க. பவித்திரம் - தூய்மை. புனித தீர்த்தம்
என்னும் பாடத்திற்கு, அத்தீர்த்தம் மேலாய் ஆகி நிற்கும் எனக் கூட்டிப்
பொருளுரைக்க. (21)

ஆதர விலனா யந்நீ ராடினோன் சுவர்க்கஞ் சேரும்
ஆதர வுளனாய் மூழ்கி வானவ ராதி யானோர்க்
காதர வரிசி யெள்ளுத் தருப்பண மமையச் செய்தோன்
ஆதர வேள்வி முற்று மாற்றிய பயனைச் சேரும்.

     (இ - ள்.) ஆதரவு இலனாய் - அன்பு இல்லாதவனாய், அந்நீர்
ஆடினோன் - அந்தத் தீர்த்தத்தில் நீராடியவன், சுவர்க்கம் சேரும் -
சுவர்க்கத்தை யடைவன்; ஆதரவு உளனாய் - அன்பு உள்ளவனாய், மூழ்கி
- நீராடி, வானவர் ஆதி ஆனோர்க்கு - தேவர் முதலானவர்க்கு, ஆதரவு
- விருப்பத்துடன், அரிசி எள்ளு - அரிசியையும் எள்ளையுங் கொண்டு,
தருப்பணம் அமையச் செய்தோன் - தருப்பணம் விதியோடு பொருந்தச்
செய்தவன், ஆதரம் வேள்வி முற்றும் - விரும்பத் தக்க வேள்வி
களனைத்தையும், ஆற்றிய பயனைச் சேரும் - செய்தலால் வரும் பயனை
அடைவான் எ - று.

     ஆதியானோர் என்றதனால் பிதிரர் முதலாயினார் கொள்க. (22)

ஏனைமா தலங்க டம்மி லிருந்துசெய் விரதம் பூசை
தானமா தரும மோமந் தவஞ்செபந் தியானந் தம்மால்
ஆனமா பயனிற் கோடி யதிகமா மடைந்து மூழ்கி
ஞானமா தீர்த்த ஞாங்க ரிருந்தவை நயந்து செய்யின்.

     (இ - ள்.) ஏனைமா தலங்கள் தம்மில் இருந்து - பெருமை
பொருந்திய மற்றைப் பதிகளிலிருந்து, செய் - செய்யும், விரதம் பூசை தானம்
மா தருமம் ஓமம் தவம் செபம் தியானம் தம்மால் ஆன -


     (பா - ம்.) * இன்ன நன்னூலில். +புனித தீர்த்தம்.