நோன்பு பூசை தானம்
பெரிய தருமம் ஓமம் தவம் செபம் தியான மாகிய
இவைகளினாலாகின்ற, மா பயனில் - பெரிய பயனிலும், ஞான மா தீர்த்தம்
அடைந்து மூழ்கி - பெருமை பொருந்திய ஞான தீர்த்தத்திற் சென்று நீராடி,
ஞாங்கர் இருந்து - (அதன்) கரையிலிருந்து, அவை நயந்து செய்யின் -
அவற்றை விரும்பிச் செய்தால், கோடி அதிகம் ஆம் - (வரும் பயன்)
கோடி மடங்கு அதிகமாகும் எ - று.
பயனிலும்
செய்யின் அதிகமாம் என்க. கோடி யென்றது
அளவின்மைக்கு ஓர் எடுத்துக் காட்டு. (23)
பிறந்தநா ளந்நீர் மூழ்கின் மேலைவெம் பிறவிப் பௌவம்
மறிந்திடு மறிதேள் கும்ப மதிகளின் மூழ்கித் தென்பால்
உறைந்தவர் பொருட்டுப் பிண்ட முதலினா லவர்தா மாழ்ந்து
நிறைந்திடு பிறவிப் பௌவ நின்றுமே லெழுவ ரன்றே. |
(இ
- ள்.) பிறந்தநாற் அந்நீர் மூழ்கின் - பிறந்த நாளில் அந்தத்
தீர்த்தத்தில் மூழ்கினால், மேலை வெம் பிறவிப் பௌவம் மறிந்திடும் -
தொன்று தொட்டு வருகின்ற கொடிய பிறவிக்கடல் வற்றும்; மறிதேள்
கும்பம் மதிகளின் மூழ்கி - சித்திரை கார்த்திகை மாசி மாதங்களில் மூழ்கி,
தென்பால் உறைந்தவர் பொருட்டு - தென் திசையிலிருக்கும் பிதிரர்களின்
பொருட்டு, பிண்டம் உதவினால் - பிண்டங் கொடுத்தால், அவர் தாம்
ஆழ்ந்து நிறைந்திடு - அப்பிதிரர்கள் தாம் ஆழ்ந்து அழுந்திய, பிறவிப்
பௌவம் நின்று மேல் எழுவர் - பிறவிக் கடலினின்றும் மேலே எழுவார்கள்
எ - று.
பிறந்தநாள்
- ஜன்ம நட்சத்திரம். மறி - ஆடு; மேடம். தேள் -
விருச்சிகம். மேடம், விருச்சிகம், கும்பம் இவ்விராசிகளில் ஆதித்தனிருக்குங்
காலம் முறையே சித்திரை, கார்த்திகை, மாசி மாதங்களாம். மதி - மாதம்.
படைப்புக் காலத்து அயனாற் படைக்கப்பட்டதோர் தேவ சாதியாரும், தனது
குடியில் முன்பு இறந்தோரும் பிதிரரெனப் படுவர்; இறந்தவர்களைக் குறித்து
அத்தேவர்க்குக் கடன் செலுத்துவர். பிதிரருலகம் தெற்கிலுள்ளது. ஆழ்ந்து
நிறைந்திடல் - மிக்க ஆழமுடைத்தாதல்; அளவிட முடியாமை. அன்று,
ஏ : அசை. (24)
அத்தட மருங்கின் யாவர் தென்புல மடைந்தோர் தங்கள்
சித்தமா சகற்ற வேண்டிச் செய்கடன் முடிக்கி னன்னோர்*
எத்தனை யெண்ணேர்ந்தாலு மெள்ளுக்கா யிரமாண் டாக
அத்தனை யாண்டு மட்டு மவரைவிண் ணாள வைப்பார். |
(இ
- ள்.) தென் புலம் அடைந்தோர் யாவர் - தென் திசைக்கே
கினவர் யாவரோ, (அவர்) தங்கள் - அவர்களுடையய, சித்தம் மாசு - மன
முதலிய வற்றாற் செய்த பாவத்தை, அகற்ற வேண்டி - நீக்க விரும்பி,
செய்கடன் - செய்ய வேண்டிய கடமைகளை, அத்தடம் மருங்கின் முடிக்கின்
- அத்தீர்த்தத்தின் கரையிலிருந்து முடித்தால், அன்னோர் - அம்
முடிப்போர், எத்தனை எள் நேர்ந்தாலும் (பிதிரர் பொருட்டு) எவ்வளவு
எள்ளை ஈந்தாலும், எள்ளுக்கு ஆயிரம் ஆண்டாக - எள் ஒன்றுக்கு
ஆயிரம் வருடமாக,
(பா
- ம்.) * முடிக்க வன்னோர்க்கு;
|