I


18திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



மூள - மூண்டு எரியவும், மறம் குலவு - வீரம் பொருந்திய, வேல் -
வேற்படையை, எடுத்த - திருக்கரத்தி லேந்திய, குமரவேள் - முருகவேளின்,
சேவடிகள் - சிவந்த திருவடிகளை, வணக்கம் செய்வாம் - வணங்குவாம்
எ - று.

     சூரபன்மன் கடல் நடுவே மாமரமாய்த் தோன்றி நின்றபொழுது
முருகக் கடவுள் ஆங்கெய்தி அதனைத் தமது வேலாற் றுணித்தனராகலின்
‘கருங்கடலும் - கலங்க’ என்றார். திருமுருகாற்றுப்படையுள் ‘பார்முதிர்
பனிக்கடல் கலங்கவுள் புக்குச், சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்’ என்று
கூறப்படுதலுங் காண்க. கிரவுஞ்சன் என்னும் அசுரன் மலைவடிவாயிருந்து,
முருகக் கடவுள் சேனையுடன் வரும் பொழுது மாயை பல புரிந்து, அவரது
வேலாற் பிளக்கப்பட்டமையால், ‘சிகைப் பொருப்பும் . . . . பிளப்ப’
என்றார். அவுணப் பெருங்கடல், குருரப் பொருப்பு என்பன உருவகம்.
வயிற்றினழல் - சோகத்தீ. இவ்வரலாறுகளனைத்தும் கந்தபுராணத்துட்
காண்க. வேலெடுத்த எனக் காரணத்தாற் காரியத்தைக் கூறினார். (15)

              நாமகள்
பழுதகன்ற நால்வகைச்சொல் மலரெடுத்துப்
    
பத்திபடப் பரப்பித் திக்கு
முழுதகன்று மணந்துசுவை யொழுகியணி
    
பெறமுக்கண் மூர்த்தி தாளில்
தொழுதகன்ற வன்பெனுநார் தொடுத்தலங்கல்
    
சூட்டவரிச் சுரும்புந் தேனுங்
கொழுதகன்ற வெண்டோட்டு முண்டகத்தா
    
ளடிமுடிமேற் கொண்டு வாழ்வாம்.

     (இ - ள்.) பழுது அகன்ற - குற்றநீங்கிய, நால்வகைச் சொல் மலர்
எடுத்து - பெயர் வினை இடை உரி என்னும் நான்கு வகையை யுடைய
சொற்களாகிய மலர்களை எடுத்து, பத்திபட பரப்பி - நிலல் பெற வைத்து,
திக்குமுழுது அகன்று - எல்லாத் திக்குகளினுஞ் சென்று, மணந்து -
கமழ்ந்து, சுவை ஒழுகி - கூசை ஒழுகப்பெற்று, அணிபெற - அழகுபெற,
அகன்ற அன்பு எனும் நார் - பெரிய அன்பாகிய நாரினால், அலங்கல்
தொடுத்து - பாமாலையாகச் செய்து, முக்கண் மூர்த்தி - மூன்று
கண்களையுடைய இறைவனுடைய, தாளில் - திருவடிகளில், தொழுது -
வணங்கி, சூட்ட - அணிவதற்கு, வரி - கீற்றுக்களையுடைய, சுரும்பும்
தேனும் - ஆண்வண்டும் பெண்வண்டும், கொழுது - குடைதலினால்,
அகன்ற - விரிந்த, வெண் தோட்டு முண்டகத்தாள் - வெண்மையான
இதழ்களையுடைய தாமரைப்பூவை இருக்கையாகவுடைய நாமகளின், அடி -
திருவடிகளை, முடிமேற் கொண்டு வாழ்வாம் - சென்னியிற் சூடிவாழ்வாம்
எ - று.

     பழுது - மலருக்குப் புழுக்கடி முதலியனவும், சொல்லுக்குத் திணை
வழு முதலியனவும் ஆம். மலரும் கோட்டுப்பூ கொடிப்பூ, நிலப்பூ, நீர்ப்பூ
என நால்வகைப்படும். நால்வகைச் சொல்லென்பன இயற்சொல், திரிசொல்,
திசைச்சொல், வடசொல் எனலுமாம்;