அத்தனை ஆண்டு மட்டும்
- அவ்வளவு வருடங்கள் வரையிலும், அவரை
விண் ஆள வைப்பார் - அப்பிதிரர்களை தேவ உலகத்தை ஆளும்படி
செய்வார்கள் எ - று.
அடைந்தோர்
யாவரோ அவர் தங்கள் என்க. முடிக்க என்பது
முடிக்கின் எனத் திரிந்ததென்னலு மொன்று. எண் எனப் பிரித்தலுமாம்;
எண் - எள். எள்ளுக்கு - எள் ஒன்றுக்கு. மட்டு என்பது அளவென்னும்
பொருளது. (21)
மூவகை யுலகி லுள்ள தீர்த்தமு முறையா லென்றுஞ்
சேவகஞ் செய்யு மிந்தத் தீர்த்தமென் நாளு மூழ்கி
ஏவரந் நீரா லென்று மீசனைப் பூசை செய்வோர்
ஆவரிப் பிறவி தன்னி லவர்கதிக் கரையைச் சார்வார்* |
(இ
- ள்.) மூவகை உலகில் உள்ள தீர்த்தமும் - மேல் கீழ் நடு
என்னும் மூன்று உலகங்களிலுமுள்ள தீர்த்தங்களைனைத்தும், முறையால் -
முறைப்படி, என்றும் - எப்போதும், சேவகம் செய்யும் இந்தத் தீர்த்தம் -
வணங்கிப் பணி செய்யப் பெற்ற இந்தத் தீர்த்தத்தின்கண், எந்நாறும் மூழ்கி
- எந்த நாளிலும் நீராடி, ஏவர் என்னும் அந்நீரால் - எவர் எப்போதும்
அந்த நீராலே, ஈசனைப் பூசை செய்வோர் ஆவர் - சோம சுந்தரக்
கடவுளைப் பூசிக்கின்றவரோ, அவர் இப்பிறவிதன்னில் - அவர்கள் இந்தப்
பிறவிலேயே, கதிக்கரையைச் சார்வார் - வீடாகிய கரையைச் சேருவார்கள்
எ - று.
சேவகஞ்
செய்யதல் - பணிதல், தொண்டு செய்தல். செய்வோராவர்
ஏவர் அவர் எனக் கூட்டுக. ஆவர் : முதல் வேற்றுமைக்கண் வருஞ் சொல்.
பிறவிக் கடலை நீந்தி வீடாகிய கரையைச் சேர்வரென்க. கதிக் கரசராவார்
என்னும் பாடத்திற்கு வீட்டுலகத்திற்கு அரசாவார் என்று பொருள் கூறிக்
கொள்க. (26)
விடுத்திட லரிய நித்த வேள்விமா விரதம் வேதந்
தடுத்திட லரிய தானந் தவமிவை தரும்பே றெல்லாம்
அடுத்ததன் கரையில் வைகி யீசனை யருச்சிப் போர்க்குக்
கொடுத்திடு புண்ணியத்திற் கோடியி லொன்றுக் கொவ்வா. |
(இ
- ள்.) விடுத்திடல் அரிய - நீக்குதல் கூடாத, நித்த வேள்வி -
நித்திய வேள்வியும், மாவிரதம் - பெரிய விரதமும், வேதம் - வேதம்
ஓதுதலும், தடுத்திடல் அரிய தானம் - தடையில்லாத தானமும், தவம் -
தவமுமாகிய, இவை தரும் பேறு எல்லாம் - இவைகள் கொடுக்கின்ற
பயன்களனைத்தும், அதன் கரையில் அடுத்து வைகி - அதன் கரையிற்
சென்று இருந்து, ஈசனை அருச்சிப்போர்க்கு - இறைவனை வழிபடுவோருக்கு,
கொடுத்திடு புண்ணியத்தில் - தானங் கொடுக்கிற புண்ணியத்தில், கோடியில்
ஒன்றுக்கு ஒவ்வா - கோடியில் ஒன்றுக்கேனும் ஒப்பாகா எ - று.
விடுத்திடல்
அரிய - கைவிடுதல் கூடாத. நித்த வேள்வி -
பஞ்சயக்கியம்; அக்கினி காரியமும் என்ப. தடுத்திடல் - செய்யாது தவிர்த்
(பா
- ம்.) * கதிக்கரசராவார்.
|