I


தீர்த்தவிசேடப் படலம்181



தல். ஒன்றுக்கு - ஒரு கூறாகிய புண்ணியத்திற்கும்; உம்மை தொக்கது. (27)

உம்மையிற் பிறவி தோறு நியமநல் லொழுக்கம் பூண்டு
பொய்ம்மையில் விரதந் தானந் தவஞ்செய்து புனித ராகிச்
செம்மைநன் னெறியி னின்ற சித்தருக் கலதித் தீர்த்தம்
இம்மையி லடைந்துநித்த மாடுதற் கெய்தா தன்றே.

     (இ - ள்.) உம்மையில் பிறவிதோறும் - முன்னெடுத்த பிறப்புக்கள்
ஒவ்வொன்றிலும், நியமம்நல் ஒழுக்கம் பூண்டு - நியமமாக நல்லொழுக்
கத்தை மேற்கொண்டு, பொய்ம்மை இல் - பொய் இல்லாத, விரதம் தானம்
தவம் செய்து - விரதம் தானம் தவங்களைச் செய்து, புனிதர் ஆகி -
தூயரநாகி, செம்மைநல் நெறியில் நின்ற - நடு நிலைமையாகிய நல் வழியில்
நிலைபெற்ற, சித்தருக்கு அலது - சித்த முடையாருக்கன்றி (ஏனையோர்க்கு),
இத்தீர்த்தம் - இந்தத் தீர்த்தமானது, இம்மையில் அடைந்து -
இப்பிறவியில்சென்று, நித்தம் ஆடுதற்கு எய்தாது - தினமும் ஆடுதற்குக்
கிட்டாது எ - று.

     உம்மையில் - முற்பிறவிகளில். செம்மை - சிறப்புமாம். சித்தர் -
மனமுடையார்; செய்யப்படுவன செய்து முடித்தருவாம். சித்தருக்கு எய்து
வதன்றி ஏனையருக்கு எய்தா தென்க. நித்தம் - நாடோறும். அன்று,
ஏ : அசை. (28)

மதிகதிரோ னிடத்தொடுங்கு தினந்திங்கட்
     பிறப்பரவம் வாயங் காந்து
கதிர்கடமை விழுங்குதினம் விதிபாத
     மிந்நாளிற் கருதி மூழ்கித்
துதிகடருப் பணந்தானம் புரிதன்மனு
     வோதுதலத் தொகையொன் றற்கொன்
றதிகபல னம்முறைநூ றாயிரநூ
     றாயிரமோ ரனந்த மாகும்.

     (இ - ள்.) மதி கதிரோன் இடத்து ஒடுங்கு தினம் - சந்திரன்
சூரியனிடத்தில் ஒடுங்குகின்ற அமாவாசையும், திங்கள் பிறப்பு - மாதப்
பிறப்பும், அரவம் வாய் அங்காந்து - இராகு கேதுக்கள் வாயைத் திறந்து,
கதிர்கள் தமை விழுங்கு - சந்திர சூரியர்களை விழுங்குகின்ற நாளும்,
விதிபாதம் - விதி பாதமுமாகிய, இந்நாளில் - இந்த நாட்களில், கருதிமூழ்கி
- பயனைஎண்ணிநீராடி, துதிகள் தருப்பணம் தானம் புரிதல் - துதிகளும்
தருப்பணமும் தானமும் செய்தலும், மனு ஓதுதல் - சமந்திரம் செபித்தலு
மாகிய, அத்தொகை - அவை நான்கும், அம்முறை - அந்நாட்களின்
முறையே, நூறு ஆயிரம் நூறாயிரம் ஓர் அனந்தம் - நூறும் ஆயிரமும்
நூறாயிரமும் அளவில்லாதனவும் ஆக, ஒன்றற்கு ஒன்று - ஒன்றைக்
காட்டிலும் ஒன்று, அதிக பலன் ஆகும் - மிக்க பலன் உடையனவாகும்
எ - று.