I


184திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



முன்னவ னருளிச் செய்த காரண முறையா லன்றி
இன்னமிப் புனித வாவிக் கேதுவா லெய்து நாமம்
மின்னவிர் சடையான் சென்னி மேவிய கங்கை நீரிற்
பின்னது கலந்த நீராற் பெருஞ்சிவ கங்கை யென்றும்.

     (இ - ள்.) முன்னவன் அருளிச் செய்த காரண முறையால் அன்றி -
இறைவனருளிச் செய்த காரண முறையால் வந்த பெயர்களே அல்லாமல்,
இன்னம் - இன்னமும், இப்புனித வாவிக்கு - இந்தத் தூய பொய்கைக்கு,
ஏதுவால் எய்தும் நாமம் - காரணத்தால் வரும் பெயர். மின் அவிர்
சடையான் - மின் போலும் விளங்குகின்ற சடையையுடைய இறைவனது,
சென்னி மேவிய கங்கை நீரில் - திருமுடியிற் பொருந்திய கங்கையின
புனலில், பின் அது கலந்த நீரால் - பின்பு அது கலந்த தன்மையால்,
சிவகங்கை என்றும் பெறும் - சிவ கங்கை எனவும் பெறும் எ - று.

     நாமம் சிவகங்கை யென்றுஞ் சொல்லப்பெறும் என்க. கலந்த நீர் -
கலந்த தன்மை. (33)

அலகிலாத் தீர்த்தந் தம்மு ளதிகவுத் தமமாய்த் தோன்றி
இலகலா லிதனைத் தீர்த்த வுத்தம மென்ப ராய்ந்தோர்
பலவிதழ் விரித்துச் செம்பொற் பங்கய மலர்ந்த நீரால்
உலகவர் யாரும் பொற்றா மரையென வுரைப்ப ரன்றே.

     (இ - ள்.) அலகு இலா - அளவில்லாத, தீர்த்தம் தம்முள் -
தீர்த்தங்களுக்குள், அதிக உத்தமம் ஆய்த் தோன்றி இலகலால் - மேலான
உத்தமமாய்க் காணப்பட்டு விளங்குதலால், இதனை - இத்தீர்த்தத்தை,
ஆய்ந்தோர் - நூலாராய்ந்தோர், பல இதழ் விரித்து - பல இதழ்களையும்
விரித்து, செம்பொன் பங்கயம் மலர்ந்த நீரால் - சிவந்த பொற்றாமரை
மலர்ந்த தன்மையினால், உலகவர் யாரும் - உலகத்தார் எவரும்,
பொற்றாமரை என உரைப்பர் - பொற்றாமரை யெனக் கூறுவர் எ - று.

     மேற் பாட்டிலுள்ள எய்து நாமம் என்பதனைக் கூட்டி, எய்து நாமம்
உத்தம தீர்த்தமென்பர் என முடிக்க; பின்னுள்ள பெயர்களோடும்
இங்ஙனமே கூட்டி முடிக்க. அன்று, ஏ : அசை. (34)

தருமமுன் னாகு நான்குந் தருதலாற் றரும தீர்த்தம்
அருமைசா லருத்த தீர்த்த மரும்பெறற் காம தீர்த்தம்
இருமைசேர் முத்தி தீர்த்த மென்பதா மினைய தீர்த்தம்
வெருவரு பாவ மென்னும் விறகினுக் கெரியா மன்றே.

     (இ - ள்.) தருமம் முன் ஆகும் நான்கும் தருதலால் - தரும
முதலாகிய நான்கையும் நல்குவதனாலே, தரும தீர்த்தம் - தரும தீர்த்தம்,
அருமைசால் அருத்த தீர்த்தம் - அருமை மிகுந்த அருந்த தீர்த்தம்,
அரும்பெறல் காம தீர்த்தம் - பெறுதற்கரிய காம தீர்த்தம், இருமை சேர்
முத்தி தீர்த்தம் என்பதாம் - பெருமை பொருந்திய முத்தி தீர்த்