I


188திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



பாண்டி மன்னன் கையிலுள்ள, பொன் பிரம்பு - பொற் கட்டினையுடைய
பிரம்பினாலே, புறத்துப்பட்ட - முதுகிற்பட்ட, அடித்தழும்பு - அடியின்
சுவடானது, மூன்று புவனமும் பட்டது - மூன்றுலகங்களிலுமுள்ள
சராசரங்களிலும் பட்டது எ - று.

     திறம் - வகை. வியாபித்தல் - கலத்தல். அதனாலன்றோ பட்டது
என்க; இரண்டு எதிர்மறை ஓருடன் பாடாயின. அன்று ஏ : அசை; அன்று
- அந்நாளில் எனினுமாம். இறைவன் சருவ வியாபி என்பதற்கு ஓர் எடுத்துக்
காட்டுக் கூறினார். இவ்வரலாற்றை இப்புராணத்து மண் சுமந்த படலத்திற்
காண்க. (5)

சொற்றவிச் சமட்டி யான சோமசுந் தரனைக் காணப்
பெற்றவர் வியட்டி யான பிறபதி யிலிங்கங் காணல்
உற்றவ ராவ ரென்னென் றுரைக்கின்வே ரூட்டு நீர்போய்
மற்றைய சினைக ளெல்ாந் தழைவிக்கு மரத்தின் மாதோ.

     (இ - ள்.) சொற்ற இச் சமட்டி ஆன - சொல்லிய இந்தச் சமட்டி
உருவாகிய, சோம சுந்தரனைக் காணப் பெற்றவர் - சோம சுந்தரக்
கடவுளைக் காணப் பெற்றவர், வியட்டி ஆன - வியட்டி உருவாகிய, பிற
பதி - பிற திருப்பதிகளிலுள்ள, இலிங்கம் காணல் உற்றவர் ஆவர் -
இலிங்கங்களையும் காணப் பெற்றவராவர்; என் என்று உரைக்கின் - எப்படி
என்று வினாவில், வேர் ஊட்டும் நீர் - வேரை உண்பித்த நீரானது, போய்
- சென்று, மரத்தின் - மரத்திலுள்ள, மற்றைய சினைகள் எல்லாம் தழை
விக்கும் - பிற உறுப்புக்களை யெல்லாம் தழையச் செய்யும் (அது போல
வென உணர்க) எ - று.

     சமட்டியான - சூக்குமமாய் எல்லாமான. வியட்டியான - தூலமாய்
வெவ் வேறான. காரணம் என்னென்று வினவிலென்க. சில சொற்கள்
வருவித்து முடிக்கப்பட்டது. மாது ஓ : அசை.

எத்தலத் தியாவ ணெண்ணெண் டிருவிளை யாடல் செய்தான்
அத்தலத் தவனுக் கொப்பு மதிகமாஞ் சிறப்பும் பெற்ற
உத்தம னென்று மெந்த வுலகிலு* மில்லை யந்த
வித்தக னதிகத் தன்மை யெனைத்தெனின் விளம்பக் கேண்மின்.

      (இ - ள்.) எத்தலத்து - எந்தப்பதியில், யாவன் - எந்தக் கடவுள்,
எண் எண் திருவிளையாடல் செய்தான் - அறுபத்து நான்கு
திருவிளையாடல்களைச் செய்தருளினானோ, அத்தலத்து - அந்த
மதுரைப்பதியில் உள்ள, அவனுக்கு - அந்தச் சோமசுந்தரக் கடவுளுக்கு,
ஒப்பும் அதிகம் ஆம் சிறப்பும்பெற்ற - ஒப்புத்தன்மையும் உயர்வாகிய
சிறப்புத் தன்மையு்அடைந்த, உத்தமன் - கடவுள், என்றும் எந்த உலகிலும்
இல்லை - எந்தக் காலத்தினும் எந்த உலகத்திலுமில்லை; அந்த வித்தகன் -
அந்த ஞான வடிவினனுடைய, அதிகத்தன்மை - சிறப்புத்தன்மை, எனைத்து
எனின் - எத்தன்மையது என்றால், விளம்பக் கேண்மின் சொல்லக்
கேளுங்கள் எ - று.

     செய்தான் யாவன் அவனுக்கு என்க : குற்றிய லிகரம். (7)


     (பா - ம்.) * எல்லாவுலகிலும்.