பொருப்பினுட் டலைமை யெய்தும் பொன்னெடுங் குடூமி மேரு
தருக்களிற் றலைமை சாருந் தண்ணறுந் தெய்வ தாரு
விருப்புறு வேள்வி தம்முண் மேம்படும் புரவி மேதம்
அருட்படு தானந் தம்முள் விழமிதா மன்ன தானம். |
(இ
- ள்.) நெடுங்குடுமி - நீண்ட சிகரங்களையுடைய, பொன்மேரு
- பொன்னாகிய மேருமலையானது, பொருப்பினுள் தலைமை எய்தும் -
மலைகளுக்குள் முதன்மையுறும்; தண்நறுந் தெய்யவதாரு - குளிர்ந்த நறிய
கற்பகத்தரு. தருக்களில் தலைமை சாரும் - மரங்களுள் முதன்மை யெய்தும்;
விருப்பு உறு - விருப்ப மிகுகின்ற, வேள்வி தம்முள் - வேள்விகளுள், புரவி
மேதம் மேம்படும் - பரி வேள்வி உயர்வாகும்; அருள்படு தானம் தம்முள் -
அருளோடு கூடிய தானங்களுள், அன்னதானம் விழுமிது ஆம் - அன்ன
தானம் சிறந்ததாகும் எ - று. (8)
மனிதரி லுயர்ந்தோ ராதி மறையவர் தேவர் தம்மிற்
பனிதரு திங்கள் வேணிப் பகவனே யுயர்ந்தோன் வேட்டோர்க்
கினிதருள் விரதந் தம்மு ளதிகமா மிந்து வாரம்
புனிதமந் திரங்க டம்முட் போதவைந் தெழுத்து மேலாம். |
(இ
- ள்.) மனிதரில் ஆதி மறையவர் உயர்ந்தோர் - மக்களுள்
முதன்மையான மறையவர் மேலோராவர்; தேவர் தம்மில் - தேவர்களுள்,
பனிதரு திங்கள் வேணி - குளிர்ந்த சந்திரனை யணிந்த சடையை யுடைய,
பகவனே உயர்ந்தோன் - சிவபெருமானே உயர்ந்தவன்; வேட்டோர்க்கு -
விரும்பினவர்களுக்கு, இனிது அருள் - நலத்தைச் செய்கின்ற, விரதம்
தம்முள் - விரதங்களுள், இந்து வாரம் அதிகம் ஆம் - சோமவார விரதம்
சிறந்தது ஆகும்; புனித மந்திரங்கள் தம்முள் - தூயய மந்திரங்களுள்,
போத ஐந்து எழுத்து மேலாம் - ஞானத்திற்கு ஏதுவாகிய திருவைந்
தெழுத்தாகிய மந்திரம் மேன்மையுடைய தாகும் எ - று.
திருவைந் தெழுத்தின் முதன்மையை,
"மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையு ணின்றவர் தம்மை யாள்வன" |
என்னும் திருநெறித்
தமிழ் மறையா னறிக. (9)
மின்மைசான் மணியிற் சிந்தா மணிவரம் விழுப்ப நல்கும்
தன்மைசா லறங்க டம்மின் மிகுஞ்சிவ தரும மென்ப
இன்மைசா னெறிநின் றோருக் கேற்குநற் கலங்க* டம்மின்
நன்மைசான் றவரே முக்க ணாதனுக் கன்பு பூண்டோர். |
(இ
- ள்.) மின்மைசால் - ஒளிமிகுந்த, மணியில் சிந்தாமணி வரம் -
மணிகளுள் சிந்தாமணி மேன்மையானது; விழுப்பம் நல்கும் தன்மை சால் -
உயர்வைக் கொடுக்குந் தன்மை யமைந்த, அறங்கள் தம்மில் -
(பா
- ம்.) * கலன்கள், நற்றவங்கள்.
|