"இயற்சொல்
திரிசொல் திசைச்சொல் வடசொலென்
றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே" |
என்றார் ஆசிரியர்
தொல்காப்பியனாரும். சொன்மலர், அன்பெனு
நார்
என்பன உருவகம். பத்திபடப் பரப்பித் திக்கு முழுதகன்று மணந்து
சுவையொழுகி யணிபெற என்பன செம்மொழச்சிலேடை. (கற்போர்க்கு)
அன்புண்டாகப் பரப்பித், திசை முழுதும் புகழ் பொருந்துமாறு எண்வகைச்
சுவையுங் கனிந்து சொல்லணி பொருளணியுடையதாகத் தொடுத்து எனப்
பாமாலைக்கேற்ப உரைத்துக் கொள்க. எண்வகைச் சுவையாவன : வீரம்,
அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், வெகுளி, நகை என்பன. சமனிலை
கூட்டின் சுவை ஒன்பதாகும். (16)
திருநந்திதேவர்
[வேறு]
|
வந்திறை
யடியிற் றாழும் வானவர் மகுட கோடி
பந்தியின் மணிகள் சிந்த வேத்திரப் படையாற் றாக்கி
அந்தியும் பகலுந் தொண்ட ரலகிடுங் குப்பை யாக்கும்
நந்தியெம் பெருமான் பாத நகைமலர் முடிமேல் வைப்பாம். |
(இ
- ள்.) இறை அடியில் - இறைவன் திருவடிகளில், வந்து தாழும்
- வந்து வணங்குகின்ற, வானவர் - தேவர்களின், மகுடகோடி பந்தியின் -
முடியுறுப்பு வரிசைகளினின்று, மணிகள் சிந்த - மாணிக்கங்கள் சிதறும்
படியாக, வேத்திரப்படையால் - பிரம்பாகிய படையால், தாக்கி - அடித்து,
அந்தியும் பகலும் - இரவும் பகலும், தொண்டர் - திருத்தொண்டர்கள்,
அலகு இடும் - திருவலகிடுதற்குக் காரணமாயுள்ள, குப்பை ஆக்கும் -
குப்பையாகச் செய்கின்ற, நந்தி எம் பெருமான் - எம் திருநந்தி தேவரின்,
பாதம் - திருவடிகளாகிய, நகை மலர் - ஒளிபொருந்திய மலர்களை,
முடிமேல் வைப்பாம் - முடியின் கண்ணே சூடுவாம் எ - று.
மகுட
கோடிபந்தி என்பன வடசொற்களாதலின் வல்லொற்று
மிகாதியல்பாயின. கோடி - முடியுறுப்பு; எண் ஆயின் மகுடகோடி சிந்த
என எழுவாயாக்கி உரைத்தல்வேண்டும்; வேற்றுமையாயின் கோடிப்பந்தி
என ஒற்றுமிகுதல் வேண்டுமென்க. அந்தியும் பகலும் என்பதற்குக்
காலையந்தி, மாலையந்திகளிலும், நண்பகலிலும் என்று கூறலுமாம்.
தொண்டர்களுக்கெல்லாம் திருத்தொண்டுநெறி கற்பிக்கும் குரவரென்னும்
குறிப்புத்தோன்ற அலகிடுங் குப்பையாக்கும் என்றார். (17)
ஆளுடைய
பிள்ளையார்
|
கடியவிழ்
கடுக்கை வேணித் தாதைபோற் கனற்கண் மீனக்
கொடியனை வேவ நோக்கிக் குறையிரந் தனையான் கற்பிற்
பிடியன நடையாள் வேண்டப் பின்னுயி ரளித்துக் காத்த
முடியணி மாடக் காழி முனிவனை வணக்கஞ் செய்வாம். |
|