புலரியிற் சீவன் முத்தி புரேசனைக் காணப் பெற்றால்
அலைகட னான்குட் பட்ட வவனிமா தானஞ் செய்த
பலனுறுங் கதிகா லுச்சி வைகலிற் பணியப் பெற்றால்
கலைஞர்பா பத்துக் கபிலைமா தானப் பேறாம். |
(இ
- ள்.) புலரியில் - விடியற்காலையில், சீவன் முத்தி புரோசனை
- சீவன் முத்திபுரத்தில் வீற்றிருக்கும் சோமசுந்தரக் கடவுளை, காணப்
பெற்றால் - காணப் பெறின், அலைகடல் நான்குள்பட்ட - அலைகின்ற
கடல் நான்கின் உட்பட்ட, மா அவனி தானம் செய்த - பெரிய பூமியைத்
தானங் கொடுத்தலால் வரும், பலன் உறும் - பயன் எய்தும்; கதிர்கால் உச்சி
வைகலில் - சூரியன் ஒளிை வீசும் உச்சிப் போதில், பணியப் பெற்றால் -
வணங்கப் பெற்றால்; கலைஞர்பால் - அறிஞர்களிடத்து, நூற்றுப் பத்து மா
கபிலை தானப் பேறு ஆம் - ஆயிரம் பெரிய பசுக்களைத் தானஞ்
செய்தலால் வரும் பயன் கூடும் எ - று.
புலரி
- இருள் நீங்குங்காலம். புரேசன் : குணசந்தி. மா அவனி
யென்க. உச்சி - ஆதித்தன் விசும்பினடுவில் இருக்குங்காலம். கலைஞர்
வேதம் முதலிய கலைகளை யுணர்ந்தவர். (17)
விண்ணிடைப் பரிதிப் புத்தேள் மேலைநீர் குளிக்கு மெல்லை
அண்ணலை வணங்கிற் கோடி யானினத் தானப் பேறாம்
பண்ணவர் பரவும் பாதி யிருள்வயிற் பணியப் பெற்றால்
வண்ணவெம் புரவி மேத மகம்புரி பெரும்பே றெய்தும். |
(இ
- ள்.) விண் இடை - வானின்கண் உள்ள, பரிதிப் புத்தேள் -
சூரிய தேவன், மேலை நீர் குளிக்கும் எல்லை - மேலைக் கடலில் மூழ்கும்
அந்திப்பொழுதில், அண்ணலை வணங்கில் - சோமசுந்தரக் கடவுளைப்
பணிந்தால், கோடி ஆன் இனம் தானப்பேறு ஆம் - கோடி பசுக
்கூட்டங்களைத் தானஞ்செய்த பயன் எய்தும், பண்ணவர் பரவும் பாதி இருள்
வயின் - தேவர்கள் வணங்கும் அரையிருளில், பணியப் பெற்றால் -
வணங்கப் பெற்றால், வண்ணம் - நல்ல நிறத்தையுடைய வெம்புரவி மேதம்
- கடிய செலவினையுடைய பரி மேதமாகிய, மகம் புரி பெரும் பேறு எய்தும்
- வேள்வியைப் புரிதலால் வரும் பெரிய பயன் கூடும் எ - று.
வண்ணமும்
வெம்மையும் புரவிக்கு அடை. புரி : காரணப் பொருளில்
வந்தது. (18)
இன்னன வதிக மாம்பே றறிந்துபோ யெத்தே வர்க்கும்
முன்னவன் சமட்டி விச்சா புரமுறை முதல்வன் றன்னைச்
சொன்னவிக் காலந்* தோறு மிறைஞ்சிந் தொழுதுஞ் சூழ்ந்தும்
பொன்னடிக் கன்ப ராகி வழிபடும் புனித சீலர். |
(இ
- ள்.) இன்னன - இவை போல்வனவாகிய, அதிகம் ஆம் பேறு
அறிந்து போய் - மிகுந்த பயனை உணர்ந்து சென்று, எத்தேவர்க்கும்
(பா
- ம்.) * சொன்னவக்காலம்.
|