கேட்டால், பத்துப்
பிறவி அடைந்த வினை அறும் - பத்துப் பிறப்புக்
களிலெய்திய வினைகள் கெடும்; நினைந்தால் - சிந்தித்தால், நூறு பவம் -
நூறு பிறவிகளிற் செய்த, பெரும் பாவப் பிணிபோம் - பெரிய பாவமாகிய
நோய் ஒழியும்; கூடல் இறைவனை - மதுரையில் எழுந்தருளிய
அவ்விறைவனை, இன்று இறைஞ்சுதும் என்று எழுந்து - வீட்டின் புறத்தே
வந்தால், ஈரைஞ்ஞூறு மறம் உறு வெம்பவத்து இழைத்த - ஆயிரம் பாவ
மிகுந்த கொடிய பிறவிகளிற் செய்த, பாதக வல்வினை அனைத்தும் மாயும் -
பாதகங்களாகிய வினைகளெல்லாம் அழியும் எ - று.
பவம்
- பிறப்பு. பெரும் பாவம் என்க. மன்னும் ஓவும் அசை. ( )
புழைக்கைவரை தொலைத்தானைத் தரிசித்தோ
ராயிரவாம் புரவி வேள்வி
தழைத்தபெரும் பயன்பெறுவ ருருத்திரசூத்*
தம்மதனாற் றவவா னோர்கள்
தொழற்கரியான் றனைத்துதித்தோர் கணத்துக்கா
யிரராச சூய யாகம்
இழைத்தபெரும் பயன்பெறுவர் சமட்டிவடி
வாகியவவ் விலிங்கந் தன்னை. |
(இ
- ள்.) புழை கைவரை தொலைத்தானை - துவாரத்தையுடைய
துதிக்கையினையுடைய மலையாகிய யானையைத் தொலைத்த சோம சுந்தரக்
கடவுளை, தரிசித்தோர் - காணப்பெற்றவர்கள், வாம்புரவி வேள்வி ஆயிரம்
தழைத்தபெரும் பயன் பெறுவர் - தாவுகின்ற பரி வேள்விகள் ஆயிரஞ்
செய்தலால் வரும் மிகுந்த பெரிய பயனை அடைவர்; தவ வானோர்கள் -
தவத்தினையுடைய தேவர்களும், தொழற்கு அரியானை - வணங்குதற்கு
அரியவனை, உருத்திர சூத்தம் அதனால் துதித்தோர்- உருத்திர சூத்த
மந்திரத்தால் துதித்து வணங்கியவர்கள், கணத்துக்கு - கணப்பொழுதுக்கு;
ஆயிர ராச சூய யாகம் இழைத்த - ஆயிரம் இராச சூயவேள்வி செய்தலால்
வரும், பெரும்பயன் பெறுவர் - பெரிய பயனை அடைவர்; சமட்டி
வடிவாகிய அ இலிங்கம் தன்னை - சமட்டி உருவமாகிய அந்தச்
சிவலிங்கத்தை எ - று.
கைவரை
- யானை. புழை கைக்கு அடை. வாவும் புரவி. ஆயிரஞ்
செய்தலால் வரும் என விரிக்க. இலிங்கத்தன்னைப் பூசித்தோர் என வருஞ்
செய்யுளோடியையும். (22)
அங்கையள
வாகியநன் னீராட்டிப்
பூசித்தோ ரளவி லேனைத்
துங்கதலத் துறையிலிங்க மூர்த்திகளைச்
சிவாகமநூல் சொன்ன வாற்றான் |
(பா
- ம்.) * சூக்கம்.
|