I


198திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



நயந்து - விரும்பி, நூறு பொன் மலர்கொண்டு -நூறு பொன்னாலாகிய
மலர்களைக் கொண்டு, அயல்பதியில் பூசித்த பயன் எய்தும் - பிற
தலங்களிற் பூசித்தலால் வரும் பயன் அடையும்; புனித போகத் தன்மை
தரு சுந்தரற்கு - சிவபோகத் தன்மையைத் தந்தருளும் சோமசுந்தரக்
கடவுளுக்கு, தூபம் ஒருகால் கொடுப்போர் தமக்கு - ஒருமுறை தூபம்
கொடுப்பவர்களுக்கு, தாங்கள் - அக்கொடுத்தவர்கள், சொல் மனம் மெய்
உறச்செய்த - மனம் வாக்குக் காயங்கள் பொருந்தச் செய்த, ஆயிரம் குற்றம்
சுருதிநாதன் பொறுப்பன் - ஆயிரங் குற்றங்களை வேதத் தலைவனாகிய
சோமசுந்தரக் கடவுள் பொறுத்தருள்வான் எ - று.

     புனிதபோகம் -தூயபோகம்; சிவபோகம். தூபம் - நறும்புகை.
மனமொழி மெய்யென மாற்றுக. மெய்யால் என விரித்தலுமாம். ஆயிரம் -
அளவில்லன். (26)

திருவமுது நிவேதிப்போ ரவிழொன்றற்
     குகமொன்றாச் சிவலோ கத்தின்
மருவிநிறை போகமுடன் வைகுவர்தாம்
     பூலமுக வாச மீந்தோர்
பொருவரிய கடவுளராண் டொருநூறு
     கோடிசிவ புரத்து வாழ்வார்
ஒருபளித விளக்கிடுவோர் வெண்ணிறமுங்
     கண்ணுதலு முடைய ராவார்.

     (இ - ள்.) திரு அமுது நிவேதிப்போர் - அவ்வாலவாய்ப்
பெருமானுக்குத் திருவமுது படைப்போர்கள், அவிழ் ஒன்றற்கு உகம்
ஒன்று ஆக - ஒரு அவிழுக்கு ஒரு யுகமாக, சிவலோகத்தில் மருவி - சிவ
லோகத்திற் பொருந்தி, நிறை போகமுடன் வைகுவர் - நிறைந்த
போகத்துடன் வாழ்வார்கள்; தாம்பூலம் முகவாசம் ஈந்தோர் - தாம்பூலமும்
முகவாச மைந்தும் கொடுத்தவர்கள், பொருவு அரிய - ஒப்பில்லாத,
கடவுளார் ஆண்டு ஒரு நூறுகோடி - நூறுகோடி தேவ ஆண்டுகள்,
சிவபுரத்து வாழ்வார் - சிவலோகத்தில் வாழ்வார்கள்; ஒரு பளித விளக்கு
இடுவோர் - ஒரு கற்பூர விளக்கு இடுபவர்கள்; வெள் நிறமும் கண் நுதலும்
உடையர் ஆவர் - வெண்மை நிறத்தையும் நெற்றிக்கண்ணையும்
உடையராவார்கள் எ - று.

     அவிழ் - பருக்கை யெனப்படுவது. யுகம் உகமென்றாயது. முக
வாசமாவன : தக்கோலம், ஏலம், இலவங்கம், கர்ப்பூரம், சாதி என்பன.
கடவுளராண்டு - மக்கட்கு ஓராண்டு ஒருநாளாகக் கணிக்கப்பட்ட ஆண்டு.
பளித விளக்கு - கர்ப்பூர நீராஞ்சனம். கர்ப்பூர தீப வரலாறு
ஆராய்ச்சிக்குரியது. விளக்கிடுவோர் சிவசாரூபம் பெறுவர் என்றதாயிற்று.
(27)

நறுந்திருமஞ் சனமெடுக்கக் குடமாட்ட
     மணிக்கலச நல்ல வாசம்
பெறுந்தகைய தூபக்கால் தீபக்கால்
     மணியின்ன பிறவுங் கங்குற்