I


200திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



பொற் கொம்புகள் ஆடும் செயலை ஒக்க, அணங்கு அனையார் - தேவ
மகளிரை ஒத்த பெண்கள், அரங்கு ஆடு கண்டு - மேடையில் நடித்தலைக்
கண்டு, இன்பச் செல்வத்து ஆழ்வார் - இன்பந்தரும் செல்வக் கடலுள்
அழுந்துவார்கள் எ - று.

     இயல், இசைய, அ : சாரியை; பொருந்தும் இசையினையுடைய வெனப்
பெயரெச்சமுமாம். மற்றுள்ள இசைய இசையும் என்பன உவமச் சொற்கள்.
இறுமாத்தல் - களித்தல். அரங்கிலாடுதல் ஆடு : முதனிலைத் தொழிற்
பெயர். இன்பமாகிய செல்வமுமாம். (29)

ஒருகாலட் டாங்கமுடன் பஞ்சாங்க
     முடனாத* லொண்செங் கால்வெண்
குருகாலு+ மலர்த்தடஞ்சூழ் கூடனா
     யகற்பணிவோர் கோலொன் றோச்சிப்
பொருகாலின் வருபரித்தேர் மன்னவரா
     யாவருந்தம் புடைவந் தெய்தி
இருகாலுந் தலைவருட வெக்காலும்
     தமைவணங்க விருப்ப ரன்றே

.      (இ - ள்.) ஒள் செங்கால் - ஒள்ளிய சிவந்த கால்களையுடைய,
வெண் குருகு ஆலும் - வெண்மையான அன்னங்கள் ஒலிக்கும், மலர்த்
தடம் சூழ் - தாமரை மலர்களையுடைய தடாகங்களாற் சூழப்பெற்ற, கூடல்
நாயகன் - மதுரை நாயகனை, ஒருகால் - ஒருமுறை, அட்டாங்கம்
உடனாதல் பஞ்சாங்கம் உடனாதல் - அட்டாங்கமோ டாவது பஞ்
சாங்கமுடனாவது, பணிவோர் - வணங்குவோர், கோல் ஒன்று ஓச்சி -
ஒப்பற்ற செங்கோலைச் செலுத்தி, பொரு - தாக்குகின்ற, காலின் வரு
பரித்தேர் பன்னவர் ஆய் - காற்றைப்போலும் விரைந்து செல்லும்
குதிரைகள் பூட்டிய தேரையுடைய அரசராகி, யாவரும் - எல்லா மன்னரும்,
தம் புடைவந்து எய்தி - தமது பக்கம் வந்து பொருந்தி, இரு காலும்
தலைவருட - இரண்டு அடிகளும் அவர்கள் தலையில் தடவுமாறு,
எக்காலும் தமை வணங்க இருப்பர் - எஞ்ஞான்றும் தம்மை வணங்க
வீற்றிருப்பர் எ - று.

     அட்டாங்கம் - தலை, கையிரண்டு, செவி யிரண்டு, மோவாய், தோள்
இரண்டு என்னும் எட்டுறுப்பும் நிலந்தோயப் பணிதல். பஞ்சாங்கம் - தலை,
கையிரண்டு, முழந்தாள் இரண்டு என்னும் ஐந்துறுப்பும் நிலந்தோயப்
பணிதல். ஆதல் என்னுமிடைச்சொல் முன்னும் இயைந்தது. பொருபரி
என்னலுமாம். எய்தி வணங்க எனக் கூட்டுக. அன்று, ஏ : அசை. (30)

இத்தகைய திருவால வாயுடையான்
     றிருமுன்ன ரியற்று மோமம்
மெய்த்தவமந் திரந்தான மின்னவணு
     வளவெனினு மேரு வாகும்


     (பா - ம்.) * உடனாக. +குருகாரும்.