உத்தமமா மிவ்விலிங்கப் பெருமையெலாம்
யாவரளந் துரைப்பர் வேத
வித்தகரே சிறிதறிந்த வாறுரைத்தே
மினிப்பலகால் விளம்பு மாறென். |
(இ
- ள்.) இத்தகைய திருவாலவாயுடையான் - இத்தன்மையை
யுடைய திருவாலவாயையுடைய சோம சுந்தரக் கடவுளின், திரு முன்னர் -
சந்நிதானத்தில், இயற்றும் - செய்கின்ற, ஓமம் மெய்த்தவம் மந்திரம் தானம்
இன்ன - ஓமங்களும் உண்மைத் தவங்களும் மந்திரங்களும் தானங்களும்
இவை போல்வன பிறவும், அணு அளவு எனினும் - அணுவின் அளவின
ஆயினும், மேரு ஆகும் - மகா மேருவின் அளவின ஆகும்; உத்தமம்
ஆம் - சிறந்தது ஆகிய, இ இலிங்கப் பெருமை எலாம் - இந்த இலிங்க
மூர்த்தியின் பெருமைகள் அனைத்தையும், அளந்து உரைப்பார் யாவர் -
அளவிட்டுக் கூறவல்லார் யார் (ஒருவருமில்லை எனினும்), வேத வித்தகரே
- வேதங்களில் வல்லமுனிவாகளே,சிறிது அறிந்தவாறு உரைத்தேம் - சிறிது
அறிந்தபடி கூறினேம், இனிப் பலகால் விளம்புமாறு என் - இனிப் பலமுறை
சொல்லுவது என்னை எ - று.
அணுவும்
மேருவும் சிறுமை பெருமைகட்கு எடுத்துக் காட்டாவன.
பயனாற் பெரிதாம் என்றார். அறிந்தவாறு சிறிது உரைத்தேம். விளம்பினும்
அளவு படாமையின் இஃதே யமையு மென்பார், விளம்புமாறென்
என்றார். (31)
இத்தலத்துக் கொப்பாக வொருதலமும்
பொற்கமல மென்னு மிந்த
உத்தமமா தீர்த்தத்துக் கொப்பதொரு
தீர்த்தமுமெய் யுணர்வானந்த
வித்தனைய விலிங்கமிதற் கொப்பாவோ
ரிலிங்கமும்பார் விண்மே லென்னும்
முத்தலத்து மிலையந்த மூர்த்திதிரு
நாமங்கண் மொழியக் கேண்மின். |
(இ
- ள்.) இத்தலத்துக்கு ஒப்பு ஆக ஒரு தலமும் - இந்தத்
திருப்பதிக்கு இணையாக ஒரு பதியும், பொன் கமலம் என்னும் -
பொற்றாமரை என்று கூறப்படும், இந்த உத்தம மா தீர்த்தத்துக்கு ஒப்பது -
இந்தச் சிறந்த பெருமை பொருந்திய தீர்த்தத்துக்கு ஒப்பதாகிய, ஒரு
தீர்த்தமும் - ஒரு பொய்கையும், மெய் உணர்வு ஆனந்த வித்து அனைய
- உண்மை அறிவு இன்பங்களின் மூலம் போலும், இலிங்கம் இதற்கு -
இந்த இலிங்கத்துக்கு, ஒப்பா ஓர் இலிங்கமும் - இணையாக ஓடா
இலிஙகமும், பார் விண்மேல் என்னும் - பூமி அந்தரம் சுவர்க்க மென்
கின்ற, முத்தலத்தும் இலை - மூன்றுலகங்களிலுமில்லை; அந்த மூர்த்தி
திருநாமங்கள் மொழியக் கேண்மின் - அந்தச் சோமசுந்தரக் கடவுளின்
திருப்பெயர்களைச் சொல்லக் கேளுங்கள் எ - று.
|