மெய்யுணர்
வானந்தம் - சச்சிதானந்தம். பார்விண்மேல் - இவை
பூலோகம், புவர்லோகம், சுவாலோகம் என்றும் கூறப்படும்; புறப்பாட்டில்,
"கீழது, முப்புண ரடுக்கிய முறைமுதற்
கட்டின்
நீர்நிலை நிவப்பின் கீழு மேலது
ஆனிலை யுலகத் தானும்" |
என வருவது நோக்கற்
பாலது. தலவிசேடத்துட் கூறிய திருவால வாய்க்
கிணையாமொரு தலமு என்னுஞ் செய்யுளோடு இது பெரிதும் ஒத்துள்ளமை
காண்க. (32)
கருப்பூர
சுந்தரன்பூங் கடம்பவன
சுந்தரனுட் கரவாத் தொண்டர்
விருப்பூருங் கலியான சுந்தரனல்
லறவடிவாய் விளங்கு மேற்றுப்
பொருப்பூரு மபிராம சுந்தரன்றேன்
புடைகவிழப் பொன்னிற் பூத்த
மருப்பூசு சண்பகசுந் தரன்மகுட
சுந்தரன்றான் வாழி மன்னோ. |
(இ
- ள்.) கருப்பூர சுந்தரன் - கருப்பூர சுந்தரன் என்றும், பூங்
கடம்பவன சுந்தரன் - பூக்களையுடைய கடம்பவன சுத்தரன் என்றும், உள்
கரவாத் தொண்டர் - உள்ளத்தில் வஞ்சனை யில்லாத அடியார்களின்,
விருப்பு ஊரும் கலியான சுந்தரன் - அன்பு மிக்க கலியான சுந்தரன்
என்றும், நல் அறவடிவாய் விளங்கும் - நல்ல தரும வடிவாகி விளங்கு
கின்ற, ஏற்றுப் பொருப்பு ஊரும் - இடபமாகிய மலையை நடாத்தியருளும்,
அபிராம சுந்தரன் - அபிராம சுந்தரன் என்றும், தேன்புடை கவிழ - தேன்
பக்கத்தில் நிரம்பச் சொரிய, பொன்னில் பூத்த - பொன்னைப் போல
மலர்ந்த, மரு பூசும் - மணம் நிறைந்த, சண்பக சுந்தரன் - சண்பக சுந்தரன்
என்றும், மகுட சுந்தரன் - மகுட சுந்தரன் என்றும் எ - று.
அடைகளைக்
கடம்பிற்கும் சண்பகத்திற்கும் கொள்க. எண்ணி வரும்
பெர்கள் பின்னே இவை முதலா நாமம் அளப்பிலவாகும் என்பது
கொண்டு முடியும். வாழி, உட்கோள். தான், மன், ஓ என்பன
அசைகள். (33)
மான்மதசுந்
தரன்கொடிய பழியஞ்சு
சுந்தரனோர் மருங்கின் ஞானத்
தேன்மருவி யுறைசோம சுந்தரன்றேன்
செவ்வழியாழ் செய்யப் பூத்த
கான்மருவு தடம்பொழில்* சூ ழாலவாய்ச்
சுந்தரன்மீன் கணங்கள் சூழப்
பான்மதிசூழ் நான்மாடக் கூடனா
யகன்மதுரா பதிக்கு வேந்தன். |
(பா
- ம்.) * கடம்பொழில்.
|