(இ
- ள்.) பாதாளம் ஏழ் உருவ முளைத்து எழுந்தது - பாதாள
முடியவுள்ள ஏழுலகங்களும் ஊடுருவ முளைத்து மேலெழுந்தது; அ
இலிங்கப் படிவம் தன்னுள் - அந்த இலிங்கத் திருமேனியுள், ஆதாரமாக
அமர்ந்து - எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருந்து, அறுபத்து நாலு
விளையாடல் செய்த - அறுபத்து நான்கு திருவிளையாடல்களைச்
செய்தருளிய, போதானந்தன் பெருமை - ஞானானந்தனாகிய இறைவனது
பெருமையை, நம் குரவன் மொழிப்படியே - நம் குரவனாகிய முருகக்
கடவுள் அருளிச் செய்தபடியே, புகன்றோம் என்றான் - கூறினோம்
என்றான், வேதாதி கலை தெரிந்த மலயமுனி - வேத முதலிய பல
கலைகளையு முணர்ந்த அகத்திய முனிவன்; கேட்டு அறவோர் வினாதல்
செய்வார் - முனிவர்கள் அதனைக் கேட்டு மேலும் வினவுவாராயினர்
எ - று.
கீழுலகு
ஏழாவன : - அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம்,
மகாதலம், பாதாளம் என்பன. படிவம் - வடிவம். மலயமுனி என்றானென்க.
போதானந்தன், வேதாதி யென்பன வடசொல்நெடிற் சந்தி. கேட்ட என்னும்
பெயரெச்சத்து அகரம் தொக்கதுமாம். (36)
அருட்கடலே யிறைவிளையாட் டறுபத்து
நான்கென்றா யவையா னந்தப்
பொருட்கடவு ளெக்காலத் தியாவர்பொருட்
டாடினனெம் போதந் தேறித்
தெருட்படர வரன்முறையாற் செப்புகெனக்
கரங்குவித்தார் தென்பால் வெற்பில்
இருப்பவனும் வினாயபடிக் கிறைநிரம்பத்
தொகுத்துவிரித் தியம்பு கின்றான். |
(இ
- ள்.) அருட் கடலே - கருணைக்கடலே, இறை விளையாட்டு
அறுபத்து நான்கு என்றாய் - இறைவன் திருவிளையாடல்கள் அறு பத்து
நான்கு என்று கூறியருளினாய்; அவை - அவ் விளையாடல்களை, ஆனந்தப்
பொருட்கடவுள் - ஆனந்தப் பொருளாகிய இறைவன், எக்காலத்து யாவர்
பொருட்டு ஆடினன் - எந்தக் காலத்தில் யாவர் பொருட்டு
ஆடியருளினன்; எம்போதம் தேறித் தெருள்படர - எங்கள் கலங்கிய அறிவு
தெளிந்து தூயதாக, வரன் முறையால் செப்புக என - வரன் முறைப்படி
கூறியருளுக என்று, கரம் குவித்தார் - கைககளைக் கூப்பி வணங்கினார்கள்;
தென்பால் வெற்பில் இருப்பவனும் - பொதியின் மலையிலிருப்பவனாகிய
குறுமுனியும், வினாயபடிக்கு - கேட்டபடி, இறை நிரம்ப - விடை நிரம்ப,
தொகுத்து விரித்து இயம்புகின்றான் - தொகுத்தும் விரித்தும் கூறுகின்றான்
எ - று.
தேறி
என்றமையால் கலஙகிய என்றுரைக்கப்பட்டது. செப்புகென :
அகரம் தொகுத்தல். படிக்கு, கு: அசை. இறை - விடை. தொகுத் துரைத்தல்
- பதிகமாக வுரைப்பது. (37)
ஆகச்
செய்யுள் - 327
|