பதிகம் |
வானவர்கோன்
பழிதொலைத்த விளையாட்டுங்
கரிசாப மாய்த்த வாறும்
மீனவர்கோன் காடெறிந்து புரங்கண்ட
பெருஞ்சிறப்பு மீன நோக்கி
ஆனதடா தகையழல்வா யவதரித்துப்
பாராண்ட வருளு மீசன்
தானவளை மணஞ்செய்து முடிதரித்து
மண்காத்த தகைமைப் பாடும். |
(இ
- ள்.) வானவர் கோன் பழிதொலைத்த விளையாட்டும் -
தேவேந்திரனது பழியைத் தீர்த்த திருவிளையாடலும், கரிசாபம் மாய்த்த
வாறும் - வெள்ளையானையுன் சாபத்தைத் தீர்த்த தன்மையும். மீனவர்கோன்
- பாண்டியன், காடு எறிந்து - காட்டை அழித்து, புரம் கண்ட பெருஞ்
சிறப்பும் - திருநகரங்கண்ட பெரிய சிறப்பும், மீன நோக்கி ஆன தடாதகை
- மீன்போலும் கண்ணை யுடையவளாகிய தடாதகைப் பிராட்டியார், அழல்
வாய் அவதரித்து - வேள்வித் தீயில் அவதாரம்செய்து, பார் ஆண்ட
அருளும் - பூமியை ஆட்சி செய்த கருணையும், ஈசன் - சிவபெருமான்,
அவளை மணஞ் செய்து - அப் பிராட்டியாரைத் திருமணம் செய்து
கொண்டு, முடிதரித்து மண் காத்த தகைமைப் பாடும் - முடி சூடிக்கொண்டு
பூமியை ஆண்ட தகுதியும் எ - று.
விளையாட்டு
என்பதனை எல்லாவற்றுக்கும் கொள்க. மீனவர் கோன்
- குலசேகர பாண்டியன். மலயத்துவச பாண்டியன் செய்த வேள்வித் தீ. (1)
புலிமுனியும் பணிமுனியுந் தொழவெள்ளி
மன்றுணடம் புரிந்த வாறும்
வலிகெழுதோட் குண்டகட்டுக் குறட்கன்னக்
குன்றளித்த வகையும் பின்னும்
நலிபசிநோய் கெடவன்னக் குழியழைத்துக்
கொடுத்துநீர் நசைக்கு வையை
அலைபுனல்கூ யருத்தியதும் பொன்மாலைக்
கெழுகடலு மழைத்த வாறும். |
(இ
- ள்.) புலி முனியும் பணி முனியும் தொழ - வியாக்கிரபாதரும்
பதஞ்சலியும் வணங்க, வெள்ளி மன்றுள் நடம்புரிந்த வாறும் - வெள்ளியம்
பலத்தின்கண் திருக்கூத்தாடிய தன்மையும், வலி கெழு தோள் - வலிமை
பொருந்திய தோளையுடைய, குண்டு அகட்டுக் குறட்கு - குண்டோதர
பூதத்திற்கு, அன்னக்குன்று அளத்தவகையும் - அன்னமாகிய
|