I


206திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



மலையை இட்ட தன்மையும், பின்னும் நலி பசி நோய் கெட - மீண்டும்
வருத்துகின்ற பசிநோயானது அழிய, அன்னக்குழ அழைத்துக்கொடுத்து -
அன்னக்குழியை வருவித்து அளித்து, நீர் நசைக்கு - நீர்வேட்கைக்கு,
அலைபுனல் வையை கூய் அருத்தியது - அலைகின்ற நீரையுடைய வையை
நதியை அழைத்துக் குடிப்பித்ததும், பொன்மாலைக்கு - காஞ்சன மாலைக்கு
(நீராடற்பொருட்டு), எழுகடலும் அழைத்தவாறும் - ஏழுகடலையும்
அழைத்துக்கொடுத்த தன்மையும் எ - று.

     குண்டு - ஆழம். அகடு - வயிறு. குண்டோதரன் - ஆழ்ந்தவயிற்றை
யுடையவன். குறள் - குறியது. அதனை நலிகின்ற. கூவி யென்பது கூய்
என்றாயது. காஞ்சன மாலை - மலயத்துவசன் றேவி. (2)

அந்தரர்கோ னாதனத்தி லுறைமலயத்
     துவசனைமீண் டழைத்த வாறும்
சுந்தரவுக் கிரகுமர னவதரித்த
     வாறும்வளை சுடர்வேல் செண்டு
தந்தையிடத் தவன்பெற்ற வாறுமவ
     னவ்வடிவேல் சலதி வீறு
சிந்தவிடுத் ததுமகவான் முடியைவளை
     யெறிந்திறைவன் சிதைத்த வாறும்.

     (இ - ள்.) அந்தரர்கோன் ஆதனத்தில் உறை - தேவேந்திரனுடைய
ஆசனத்தில் இருந்த, மலையத்துவசனை மீண்டு அழைத்த வாறும் -
மலையத்துவச பாண்டியனைப் பூலவகில் மீளவும் வரும்படி அழைத்த
தன்மையும், சுந்தர உக்கிர குமரன் அவதரித்தவாறும் - அதுகிய உக்கிர
குமாரபாண்டியன் அவதரித்த தன்மையும், அவன் - அப்பாண்டியன்,
தந்தையிடத்து (தன்) - தந்தையிடத்து, வளை சுடர்வேல் செண்டு பெற்ற
வாறும் - வளையும் ஒளியினையுடைய வேலும் செண்டும் பெற்றுக் கொண்ட
தன்மையும், அவன் - அவ் வுக்கிரகுமார பாண்டியன், அவ்வடிவேல் -
அந்தக் கூரிய வேற்படையை, சலதி வீறு சிந்த விடுத்தது - கடலின்
தருக்குக் கெடுமாறு விட்டதும், இறைவன் - அப் பாண்டியன், வளை
எறிந்து - திகிரிப்படையை வீசி, மகவான் முடியைச் சிதைத்தவாறும் -
இந்திரன் முடியை அழித்த தன்மையும் எ - று.

     அந்தரர் - தேவர். மீண்டு - மீள : செய வெனெச்சம் திரிந்தது.
வளைவேல் செண்டு - படைக்கலங்கள்; வளை - சக்கரம். உக்கிரகுமரன் -
முருகக் கடவுளின் அவதாரம். தந்தை - சோமசுந்தர பாண்டியனாகிய
இறைவன். இறைவன் - குமரன். (3)

பொன்னசலந் தனைச்செண்டாற் புடைத்துநிதி
     யெடுத்ததுவும் புனிதர்க் கீசன்
பன்னரிய மறைப்பொருளைப் பகர்ந்ததுவு
     மாணிக்கம் பகர்ந்த வாறுந்