தொன்னகர்மே னீர்க்கிழவன் வரவிடுத்த
கடல்சுவறத் தொலைத்த வாறும்
அன்னதனித் தொன்மதுரை நான்மாடக்
கூடனக ரான வாறும். |
(இ
- ள்.) பொன் அசலம் தனை - பொன் மலையாகிய மேருவை,
செண்டால் புடைத்து - செண்டாலடித்து, நிதி எடுத்ததுவும் - பொருளை
எடுத்ததுவும், புனிதர்க்கு - முனிவர்களுக்கு, ஈசன் - சிவபெருமான், பன்
அரிய மறைப் பொருளைப் பகர்ந்ததுவும் - சொல்லுதற்கரிய வேதப்
பொருளைக் கூறியதும், மாணிக்கம் பகர்ந்தவாறும் - மாணிக்கம் விற்ற
தன்மையும், தொல் நகர்மேல் - பழமையான மதுரை நகரத்தின் மேல், நீர்க்
கிழவன் - நீருக்குரியவனாகிய வருணனானவன், வரவிடுத்த - வரச்செய்த,
கடல் சுவறத் தொலைத்த வாறும் - கடல் சுவறுமாறு (அதை) அழித்த
தன்மையும், அன்ன தனி - அந்த ஒப்பற்ற, தொல் மதுரை - பழைய
மதுரையானது, நான் மாடக் கூடல் நகர் ஆனவாறும் - நான் மாடக் கூடல்
நகராகிய தன்மையும் எ - று.
அசலம்
- அசைவில்லாதது; மலை. புனிதர் - தூயர். (4)
வட்டங்கொள் சடையுடைய சித்தர்விளை
யாடியதோர் வனப்புங் கையிற்
கட்டங்கந் தரித்தவிரான் கல்லானை
கரும்பருந்தக் காட்டு மாறும்
உட்டங்கு வஞ்சனையா லமணர்விடு
வாரணத்தை யொழித்த வாறும்
இட்டங்கொள் கௌரிமுனம் விருத்தனிளை
யோன்குழவி யான வாறும். |
(இ
- ள்.) வட்டம் கொள் சடையுடைய சித்தர் - வட்டமாகக்
கட்டிய சடையையுடைய எல்லாம்வல்ல, சித்தர், விளையாடியது ஓர் பிரான்
- விளையாடியதாகிய ஓர் அழகும், கையில் கட்டங்கம் தரித்த பிரான் -
கையில் மழுவை ஏந்திய இறைவனாகிய அந்தச் சித்தர், கல் ஆனை கரும்பு
அருந்தக் காட்டுமாறும் - கல்லானை கரும்பு தின்னக் காட்டிய தன்மையும்,
உள் தங்கு வஞ்சனையால் - உள்ளத்தில் நிலைபெற்ற வஞ்சனையினாலே,
அமணர் விடு - சமணர்கள் ஏவிய, வார ணத்தை ஒழித்தவாறும் -
யானையை எய்த தன்மையும், இட்டம் கொள் கௌரி முனம் - அன்பிடைய
கௌரியின்முன், விருத்தன் இளையோன் குழவி ஆனவாறும் - விருத்தனும்
குமாரனும் பாலனும் ஆகிய தன்மையும் எ - று.
சுத்திய
பொக்கணத் தென்பணி கட்டங்கம் என்னும் திருக்
கோவையார்ச் செய்யுளுரையில் கடங்கமென்பது மழு; இது கட்டங்கமென
நின்றது என்று பேராசிரியர் உரைத்திருப்பது
காண்க. கட்டங்கம் -
கட்வாங்கம் என்பதன் றிரிபென்றும், யோக தண்ட மென்றும் கூறுவாரு
முளர். (5)
|