செய்யதாண் மாறிநட மாடியதும்
புழியஞ்சு திறனுந் தாயை
மையலாற் புணர்ந்தமகன் பாதகத்தை
மாற்றியது மதியா தாசான்
தையலாள் தனைவிரும்பி மாணவனை
வாளமரிற் றடிந்த வாறும்
பையரா வெய்ததுவும் படிற்றமணர்
விடுத்தபசுப் படுத்த வாறும். |
(இ
- ள்.) செய்யதாள் மாறி நடம் ஆடியதும் - சிவந்த திருவடி
மாறி ஆடியதும், பழி அஞ்சுதிறனும் - பழியஞ்சிய வகையும், தாயை - தன்
தாயை, மையலால் - காம மயக்கத்தினாலே, புணர்ந்த மகன் - சேர்ந்த
மகனுடைய, பாதகத்தை மாற்றியதும் - மாபாதகத்தைத் தீர்த்ததுவும்,
மதியாது ஆசான் தையலான் தனைவிரும்பும் மாணவனை - ஆராயாது
குரவன் பன்னியை விரும்பிய மாணவனை, வாள் அமரில் தடிந்தவாறும் -
வாட்போரில் வெட்டின தன்மையும், படிற்று அமணர் விடுத்த -
வஞ்சனையுடைய அமணர்கள் ஏவிய, பை அரா எய்ததுவும் - படத்தை
யுடைய நாகத்தை எய்ததுவும், பசுப் படுத்த வாறும் - மாயப்பசுவை
வதைத்த தன்தையும் எ - று.
மதியாது
- பொருளாக்காது எனலுமாம். படுத்தல் - கோறல். (6)
அறவேற்றுப் பரியுகைத்து மெய்க்காட்டுக்
கொடுத்தவிளை யாட்டுங் காட்டுச்
சுறவேற்றுக் கொடி*யரசன் றனக்குலவாக்
கிழிகொடுத்த தொடர்பு நாய்கர்
நறவேற்ற மலர்க்குழலார் மனங்கவர்ந்து
வளைபசர்ந்த நலனு மாறு
மறவேற்கண் மாதரார்க் கட்டமா
சித்திபெற வகுத்த வாறும்.
|
(இ
- ள்.)
அற ஏற்றுப் பரி உகைத்து - தரும விடையாகிய
புரவியைச் செலுத்தி, மெய்க்காட் கொடுத்த விளையாட்டும் - மெய்க்
காட்டிட்ட திருவிளையாட்லும், காட்டுச் சுறவு ஏற்றுக்கொடி அரசன் தனக்கு
- நீரில் வாழும் ஆண்சுறாவை எழுதிய கொடியை யுடைய பாண்டி
மன்னனுக்கு, உலவாக் கிழி கொடுத்த தொடர்பும் - உலவாக்கிழி யருளிய
தொடர்ச்சியும், நாய்கர் நறவு ஏற்ற மலர்க் குழலார் - வணிகருடைய
தேன்பொருந்திய மலர்களையணிந்த கூந்தலை யுடைய மகளிரின், மனம்
கவர்ந்து - மனத்தைக் கவர்ந்து, வளை பகர்ந்த நலனும் - வளையல் விற்ற
நன்மையும், மற வேல் கண் ஆறு மாதரார்க்கு - வீரவேல் போலுங்
கண்களையுடைய ஆறு மகளிருக்கு, அட்டமா சித்தி பெற வகுத்தவாறும் -
அட்டமாசித்தி உபதேசித் தருளிய தன்மையும் எ - று.
(பா
- ம்.) * நாட்டுஞ் சுறவேற்றுக்கொடி.
|