ஏற்றையே
பரியாகச் செய்து உகைத்தனர்; இதனை,
"கொற்றப்போர் விடையைத்தானே
குரங்குளைப் பரியாமேற் கொண்
டொற்றைச்சே வகராய்மாறி யாடியவொருவர் வந்தார்" |
என அப்படலத்திற்
கூறுமாற்றா னறிக. காடு - வனம்; வனம் - நீர்
சுறவின் ஆண் ஏறெனப் படுதலை. கடல்வாழ் சுறவும் ஏறெனப் படுமே
என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தா னறிக.
அரசன் - குல பூடண
பாண்டியன். உலவாக்கிழி - எடுக்கக் குறையாத பொன் முடிப்பு.
காட்டுதலையுடைய கொடியென் றுரைப்பாரும், நாட்டும் எனப்
பாடங்கொண்டு, நாட்டுங்கொடியென் றுரைப்பாரும் உளர். (7)
சென்னிபொருட்
டெயில்வாயி றிறந்தடைத்து
விடைபொறித்த செயலுஞ் சென்னி
மன்னிகலிட் டமர்விளைப்ப மீனவர்க்கு
நீர்ப்பந்தர் வைத்த வாறும்
பொன்னனையாள் பொருட்டிரத வாதவினை
முடித்ததுவும் புகார்க்கு வேந்தன்
தன்னையகன் குழிவீட்டித் தென்னவற்கு
மறவாகை தந்த வாறும். |
(இ
- ள்.) சென்னி பொருட்டு -
சோழன் காரணமாக, எயில் வாயில்
திறந்து - மதில் வாயிலைத் திறந்து, அடைத்து விடை பொறித்த செயலும்
- திருக்காப்பிட்டு விடையிலச்சினை வைத்தசெய் கையும், சென்னிமன்
இகல் இட்டு அமர்விளைப்ப - சோழன் நிலை பெற்ற பகைகொண்டு
போர்விளைப்ப, மீனவற்கு நீர்ப்பந்தர் வைத்த வாறும் - பாண்டியனுக்குத்
தண்ணீர்ப் பந்தல் வைத்த தன்மையும், பொன்னனையாள் பொருட்டு
இரதவாத வினை முடித்ததுவும் - திருப் பூவணத்திருந்த பொன்னனை
யாளுக்கு இரசவாத வினையை முடித்ததுவும், புகார்க்கு வேந்தன் தன்னை
- காவிரிப்பூம் பட்டினத்திற்கு அரசனாகிய சோழனை, அகன் குழி வீட்டி
- அகன்ற குழியில் வீழப்பித்து, தென்னவற்கு - பாண்டியனுக்கு, மறவாகை
தந்தவாறும் - வெற்றிக் குரிய வாகை மாலையை அளித்த தன்மையும்
எ - று.
சென்னி
- காடுவெட்டிய சோழன். மீனவன் - இராச புரந்தர
பாண்டியன். புகார்க்கு வேந்தன் - சேவக சோழன்; புகார் - காவிரிப்
பூம் பட்டினம்; காவிரி கட்லொடு கலக்குமிடத்துள்ளது; சோழர்தலை
நகரங்களிலொன்று. தென்னவன் - சுந்தரேசபாத சேகரபாண்டியன். மறம்
- வீரம்; ஈண்டு வெற்றி. அகன் குழி : மரூஉ முடிபு. வீட்டி :
வீழ்த்தியென்பதன் மரூஉ. (8)
மனக்கவலை
கெடவுலவாக் கோட்டையடி
யாற்களித்த வகையு மாமன்
எனக்கருணை வடிவாகி வழக்குரைத்துப்
பொருவணிகற் கீந்த வாறுஞ் |
|