I


210திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



சினக்கதிர்வேல் வரகுணற்குச் சிவலோகங்
     காட்டியதுந் திவவுக் கோலான்
தனக்கடிமை யெனவிறகு திருமுடிமேற்
     சுமந்துபகை தணித்த வாறும்.

     (இ - ள்.) மனக்கவலை கெட - மனத்திலுள்ள துன்பம் நீங்குமாறு,
அடியாற்கு - தொண்டனுக்கு, உலவாக் கோட்டை அளித்த வகையும் -
உலவாக் கோட்டை யளித்தருளிய தன்மையும், மாமன் என - மாமன்
போல, கருணை வடிவு ஆகி - அருள் வடிவு கொண்டு, வழக்கு உரைத்து
- வழக்குக் கூறி, வணிகர்க்குப் பொருள் ஈந்தவாறும் - வணிகனுக்குப்
பொருள் கொடுத்த தன்மையும், சினக் கதிர் வேல் வரகுணற்கு -
சினத்தையுடைய ஒளி பொருந்திய வேற் படையை யுடைய வரகுண
பாண்டியனுக்கு, சிவலோகம் காட்டியதும் - சிவலோகங் காட்டியருளியதும்,
திவவுக் கோலான் தனக்கு - நரம்புக் கட்டினையுடைய யாழ் வல்ல
பாணபத்திரனுக்கு, அடிமை என - அடிமை என்று கூறி, திருமுடிமேல்
விறகு சுமந்து - திருமுடியின்கண் விறகைச் சுமந்து, பகை தணித்தவாறும் -
பகையைவென்ற தன்மையும், எ-று.

     உலவாக்கோட்டை - கொள்ளக் குறையாத அரிசிக்கோட்டை.
அடியான் - உழுதொழலாளனான ஒரு சிவபத்தன். திவவு - யாழ் நரம்பின்
கட்டு. கோல் என்றது யாழினை. கோலான் - பாண பத்திரன். பகை -
பகைவன்; ஏமநாதன். (9)

அப்பாணற் கிருநிதியஞ சேரனிடைத்
     திருமுகமீந் தளித்த வாறும்
அப்பாணன் பாடமழை யரையிரவிற்
     பொற்பலகை யளித்த வாறும்
அப்பாணன் மனைவியிசைப் பகைவெல்ல
     வண்ணலவை யடைந்த வாறும்
அப்பாண னாளென்றோன் முலையருத்திப்
     பன்றியுயி ரளித்த வாறும்.

     (இ - ள்.) அப் பாணற்கு -அந்தப் பாண பத்திரனுக்கு, சேரன்
இடைத் திருமுகம் ஈந்து - சேரமான் பெருமாளிடத்துத் திருமுகம்
கொடுத்து, இரு நிதியம் அளித்தவாறும் - பெரிய பொருளைக் கொடுப்பித்த
தன்மையும், அப் பாணன் பாட - அவன் பாடுதற்கு, மழைஅரை இரவில் -
மழை பெய்கின்ற நள்ளிரவில். பொன் பலகை அளித்த வாறும் - பொன்
பலகை அருளிய தன்மையும், அப் பாணன் மனைவி - அவன் மனைவி,
இசைப்பகை - இசைக்குப் பகையாய் வந்தவளை, வெல்ல - வெல்லுதற்
பொருட்டு, அண்ணல் அவை அடைந்தவாறும் - இறைவன் பாண்டியன்
சபைக்குப்போன தன்மையும், அப் பாணன் ஆள் என்றோன் - அந்தப்
பாணபத்திரன் அடிமை நான் என்று கூறிய சோமசுந்தரக் கடவுள்,
முலையருத்தி - முலைகொடுத்து, பன்றி உயிர் அளித்தவாறும் - பன்றிக்
குட்டிகளின் உயிரைக் காப்பாற்றிய தன்மையும் எ - று.