I


பதிகம்213



எரியடுவெஞ் சுரந்தணித்த வாறுமம்
     ணரைக்கழுவி லிட்ட வாறுங்
கரியதென வன்னிகிண றிலிங்கங்கூய்
     வணிகமகட் காத்த வாறும்.

     (இ - ள்.) நரிகள்பரி ஆக்கியதும் - நரிகளைப் பரிகள்
ஆக்கியதும், பரிகள் நரி ஆக்கியதும் - பரிகளை நரிகள் ஆக்கியதும்,
நாகம் பூண்டோன் - நாகத்தை அணிந்த சோமந்தரக் கடவுள், அரிய
திருமேனியின்மேல் - (தனது) அரிய திருமேனியிலே, அடிசுமந்து மண்
சுமந்த அருளும் - பிரம்படி சுமந்த மண்சுமந்தருளியதும், தென்னன் -
பாண்டியனது, எரி அடுவெஞ்சுரம் தணித்தவாறும் - அழல் போலும்
வருத்தாநின்ற கொடிய வெப்பு நோயைத் தணித்தருளிய தன்மையும்,
அமணரைக்கழுவில் இட்டவாறும் - சமணர்களைக் கழுவி லேற்றிய
தன்மையும், கரி வன்னி கிணறு இலிங்கம் கூய் - சான்றாக வன்னி கிண
இலிங்கம் ஆகிய இம் மூன்றையும் அழைத்து. வணிக மகள்காத்தவாறும் -
வணிகப்பெண்ணைக்காததருளியதன்மையும் எ-று.

     வானோராலும் காண்டற் கரிய திருமேனி. சுமந்த அருளின்றன்மையும்.
தென்னன் - கூன்பாண்டியன்; நெடுமாறர். கரியது, அது : பகுதிப் பொருள்
விகுதி. (14)

எனத்தொகையா லறுபத்து நான்கிவற்றை
     நிறுத்தமுறை யீறி லாத
வினைத்தொகையா றகன்நீரெக் காலமெவர்
     பொருட்டெனநீர் வினாய வாற்றான்
மனத்தளவி லன்புமடை யுடைந்தொழுகத்
     திருவால வாயான் றாளை
நினைத்தளவி லானந்தம் பெருகவிரித்
     துரைப்பலென நெறியாற் கூறும்.

     (இ - ள்.) எனத் தொகையால் அறுபத்து நான்கு - என்று
தொகையினால் அறுபத்து நான்கு திருவிளையாடல்களாம்; ஈறு இலாத
வினைத்தொகை ஆறு அகன்றீர் - முடிவில்லாத வினைத் தொகுதியின்
நெறியைக் கடந்த முனிவர்களே, எக்காலம் எவர்பொருட்டு என நீர்
வினாயவாற்றால் - எந்தக் காலத்தில் எவர்பொருட்டு என்று நீர் கேட்ட
படியால், இவற்றை நிறுத்த முறை - இவைகளை இங்கு வைத்த முறைப்
படியே, விரித்து உரைப்பல் என - விரித்துக் கூறுவேன் என்று, மனத்து
அளவுஇல் அன்பு - மனத்தின்கண் அளவிறந்த அன்பானது, நினைந்து -
திருவாலவாயுடைய பெருமான் திருவடிகளைச் சிந்தித்து. அளவு இல்
ஆனந்தம் பெருக - அளவற் இன்பம் மிக, நெறியால் கூறும் - முறைப்படி
கூறுவான் எ - று.

     வினாவினமை மூர்த்தி விசேடப்படலத்திறுதிச் செய்யுளிற் காண்க.
மனத்து நினைத்தென்றுமாம். மடை யுடைந்தாற்போல.