1.
இந்திரன் பழிதீர்த்த படலம்
|
[அறுசீரடியாசிரிய
விருத்தம்]
|
மின்பயில் குலிசப் புத்தேள் விருத்திரா சுரனைக் கொன்ற
வன்பழி விடாது பற்றக் கடம்பமா வனத்தி லெய்தி
என்பர வாரம் பூண்ட விறைவனை யருச்சித் தேத்திப்
பின்பது கழிந்து பெற்ற பேற்றினை யெடுத்துச் சொல்வாம். |
(இ
- ள்.) மின்பயில் - ஒளிதங்கிய, குலிசப்புத்தேள் - வச்சிரப்
படையையுடைய இந்திரன், விருத்திராசுரனைக் கொன்ற - விருத்திரன்
என்னும் அசுரனைக் கொன்றதனாலாகிய, வன்பழி - வலிய பழியானது,
விடாது பற்ற - நீங்காதுபற்ற, மா கடம்பவனத்தில் எய்தி - (அது நீங்கப்)
பெரிய கடம்பவனத்தில் வந்து, என்பு அரவு ஆரம் பூண்ட இறைவனை -
எலும்பினையும் பாம்பினையும் மாலையாக அணிந்த சிவ பெருமானை,
அருச்சித்து ஏத்தி - அருச்சித்துத் துதித்து, பின்பு அது கழிந்து - பின்
அப்பழியானது நீங்கி, பெற்ற பேற்றினை எடுத்துச் சொல்வாம் - பெற்ற
பயனை எடுத்துக் கூறுவாம் எ - று.
விருத்திராசுரன்
: தீர்க்க சந்தி. கழிந்த - கழிய : எச்சத்திரிபு;
அதினீங்கி யெனலுமாம். (1)
முன்னதா
முகத்தில் வண்டு மூசுமந் தாரநீழற்
[பொற்பூண்
பொன்னவிர் சுணங்குண் கொக்ப்புலோமசை மணாளன்
மின்னவிர்ந் திமைப்பச் சிங்கஞ் சுமந்தமெல் லணைமேன் மேவி
அன்னமென் னடையா ராடு மாடன்மே லார்வம் வைத்தான். |
(இ
- ள்.) முன்னது ஆம் உகத்தில் - முற்பட்டதாகிய கிரேதா
யுகத்தில், வண்டு மூசும்மந்தார நீழல் - வண்டுகள் மொய்க்கும் மந்தார
மரத்தினது நிழலின்கண், சிங்கம்சுமந்த - சிங்கங்காளற் றாங்கப்பெற்ற,
மெல் அணை மேல் -மெத்தென்ற ஆதனத்தின்மேல். பொன் அவிர்
சுணங்கு உண் கொங்கை - பொற் பிதிர்போல விளங்கும் தேமலைக்
கொண்டிருக்கிற கொங்கைகளையுடைய, புலோமசை மணாளன் - இந்தி
ராணியின் தலைவனாகிய இந்திரன், பொன் பூண் - பொன்னாலாகிய
அணிகள், மின் அவிர்ந்து இமைப்ப - மின்போலும் விளங்கி ஒளிவிட,
மேவி வீற்றிருந்து, அன்னம் மெல்நடையார் ஆடும் - அன்னம் போலும்
மெதுவான நடையையுடைய மகளிர் ஆடுகின்ற, ஆடல்மேல் ஆர்வம்
வைத்தான் - கூத்தின்மேல் விருப்பம் வைப்பானாயினன் எ - று.
யுகம்
உகமெனத் திரிந்தது; இது தமிழில் ஊழி யெனப்படும். எக்காலம்
என்னும் வினாவிற்கு விடை கூறுவாராய் முன்னதா முகத்தில் என்றார். மர
மென்னும் பொதுமைபற்றி வண்டு மொய்த்தல் கூறுவர். மந்தாரம் -
ஐந்தருக்களின் ஒன்று; கற்பகம் முதலியவற்றுக்கும் உபலக்கணம்.
"உண்டற் குரிய வல்லாப் பொருளை
உண்டன போலக் கூறலு மரபே" |
|