I


216திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



என்பது இலக்கணமாகலின் ‘உண் கொங்கை’ என்றார். ஆடலை
நோக்குதற்கண். நீழற்கண் அணைமேல் மேவி ஆர்வம் வைத்தான் என
முடிக்க. (2)

மூவகை மலரும் பூத்து வண்டுளே முழங்கத் தெய்வப்
பூவலர் கொடிபேர்ந் தன்ன பொன்னனார் கூத்து மன்னார்
நாவல ரமுத மன்ன பாடலு நாக நாட்டுக்*
காவலன் கண்டு கேட்டுக் களிமதுக் கடலு ளாழ்ந்தான்.

     (இ - ள்.) தெய்வப்பூ - தெய்வத் தன்மை பொருந்திய தாமரை
மலரானது, வண்டு உளே முழங்க - வண்டு உள்ளே ஒலிக்கா நிற்க,
மூவகை மலரும் - ஏனைய கோட்டுப்பூ நிலப்பூ கொடிப்பூ என்ற மூவகை
மலர்களையும், பூத்து - மலர்வித்து, அலர் - மலரப் பெற்ற, கொடி பேர்ந்து
அன்ன - கொடிகள் ஆடினாற் போன்ற, பொன் அனார் கூத்தும் -
திருமகளை ஒத்த தேவமகளிரின் கூத்தையும், அன்னார் - அம்மகளிரின்,
நா அலர் - நாவினின்றும் தோன்றும், அமுதம் அன்ன பாடலும் -
அமுதத்தை யொத்த பாடலையும், நாக நாட்டுக் காவலன் -
விண்ணுலகிற்குத் தலைவனாகிய இந்திரனானவன், கண்டு கேட்டு -
(முறையே) கண்டும் கேட்டும், களிமதுக்கடலுள் ஆழ்ந்தான் - களிப்பாகிய
மதுக்கடலுள் அழுந்தியிருப்பானாயினன் எ - று.

     தெய்வப்பூ என்றது திருமகள் முதலாயினார்க்கு இருக்கையாய்ச்
சிறந்துள்ள தாமரைப்பூவை. நால்வகை மலருள் நீர்ப்பூவாகிய தாமரை
ஏனைய மூவகை மலரையும் பூத்துக்கொண்டிருக்கப் பெற்ற கொடி.
மகளிர்க்குக் கொடியும், அவர் முகத்திற்கு நீர்ப்பூவாகிய தாமரையும்,
கண்ணிற்கும் இதழுக்கும் கோட்டுப் பூவாகிய கருவிளை மலரும்,
முருக்கிதழும், மூக்கிற்கு நிலப்பூவாகிய எட்பூவும், பல்லுக்குக் கொடிப்பூ
வாகிய முல்லை யரும்பும், பாட்டுக்கு வண்டு உள்ளே முழங்குதலும்,
ஆட்டத்திற்குக் கொடியின் பெயர்ச்சியும் உவமையாம். பூவலர் என்பதைக்
கொடிக்கு அடையாக்கித் தெய்வத் தன்மையுள்ள கொடி ஏனை மூவகை
மலரையும் பூத்து என்றுரைப்பாருமுளர்; வண்டு உள்ளே முழங்க
என்றமையால் இப்பொருள் சிறவாமை காண்க. பேர்ந்தாலன்ன என்பது
வகிாரம். கண்டும் கேட்டும் என்னும் உம்மைகள் தொக்கன. தன்னை
மறந்தானென்பார், ‘களிமதுக் கடலுளாழ்ந்தான்’ என்றார். கூத்தும் பாடலும்
கண்டு கேட்டு என்றது நிரனிறை. கொடி பேர்ந்தன்ன என்றது
இல்பொருளுவமை. (3)

பையரா வணிந்த வேயிப் பகவனே யனைய தங்கள்
ஐயனாம் வியாழப் புத்தே ளாயிடை யடைந்தா னாகச்
செய்யதாள் வழிபா டின்றித் தேவர்கோ னிருந்தா னந்தோ
தையலார் மயலிற் பட்டோர் தமக்கொரு மதியுண் டாமோ.

     (இ - ள்.) பை அரா அணிந்த வேணி - படத்தையுடைய
பாம்புகளை அணிந்த சடையையுடைய, பகவனே அனைய -
சிவபெருமானையே ஒத்த, தங்கள் ஐயனாம் - தங்கள் குரவனாகிய,
வியாழப்புத்தேள் - வியாழ தேவன்,