I


இந்திரன் பழிதீர்த்த படலம்217



ஆயிடை அடைந்தானாக - அவ்விடத்து வர, செய்யதாள் வழிபாடு
இன்றி - (அவனுடைய) சிவந்த திருவடிகளுக்கு வழிபாடு செய்யாமல்,
தேவர்கோன் இருந்தான் - தேவேந்திரன் வாளாவிருந்தான்; அந்தோ -
ஐயோ, தையலார் மயலில் - மகளிரின் மயக்கத்தில், பட்டோர் தமக்கு
ஒரு மதி உண்டாமோ - வீழ்ந்தவர்கட்கு நல்லறிவு உண்டாகுமோ
(இல்லை என்றபடி) எ - று.

     பகவன் - ஆறு குணங்களையுடையவன்; சிவன். ஏகாரம் : பிரிநிலை.
ஐயன் - ஆசான். வியாழப்புத்தேள் - பொன், பிருகற்பதி. ஆயிடை -
சுட்டு நீண்டு யகரம் பெற்றது; ‘எகர வினா’ என்னும் நன்னூற் சூத்திரதது
‘தூக்கிற் சுட்டுநீளின் யகரமுந் தோன்றுத னெறியே’ என்பது காண்க.
முற்றுடன்ன ஆக என்னும் இடைச் சொல் சேர்ந்து செயவெனெச்சமாயிற்று.
அந்தோவென்பது இரங்குதற் பொருட்டாய இடைச்சொல். ஒரு : இசை
நிறைக்க வந்தது : சிறிது என்னும் பொருட்டுமாம். ஓகாரம் : எதிர்மறை.
இருந்தானென்னும் சிறப்புப் பொருளை முடித்தற்கு மதியுண்டாமோ என்னும்
பொதுப் பொருள் கூறப்பட்டது. இது வேற்றுப் பொருள் வைப்பு என்னும்
அணி. (4)

ஒல்லெனக் குரவ னேக வும்பர்கோன் றிருவி னாக்கம்
புல்லெனச் சிறிது குன்றப் புரந்தர னறிந்திக் கேடு
நல்லதொல் குரவற் பேணா நவையினால் விளைந்த தென்னா
அல்லலுற் றறிவன் றன்னைத் தேடுவா னாயி னானே.

     (இ - ள்.) குரவன் ஒல்லென ஏக - (அதனை உணர்ந்த) குரவனாகிய
வியாழன் விரைந்து சென்றுவிட, உம்பர்கோன் திருவின் ஆக்கம் -
தேவர்க்கரசனது செல்வத்தின் மிகுதி, புல்லெனச் சிறிது குன்ற -
பொலிவின்றிச் சிறிதாகக் குறைதலால், புரந்தரன் அறிந்து - இந்திரன்
(அதனை) உணர்ந்து, இக்கேடு - இந்தக் கெடுதியானது, நல்ல தொல்
குரவன் - நல்ல தொன்றுதொட்ட குரவனாயுள்ளானை, பேணா நவையினால்
வளைந்தது என்னா - வழபாடு செய்யாத குற்றத்தினால் வந்தது என்று,
அல்லல் உற்று - துன்பமுற்று, அறிவன் தன்னைத் தேடுவான் ஆயினான்
- குரவனைத் தேடத் தொடங்கினான் எ - று.

     ஒல்லென : விரைவுக் குறிப்பு. ஆக்கம் - பெருக்கம். புல்லென -
பொலிவின்றாக. சிறிது - சிறிதாக வென்க; ஒழுகக் கனற் வெனலுமாம்.
புரந்தரன் முதலாகப் பின்வரும் பெயர்களைச் சுட்டு மாத்திரமாகக்
கொள்க.(5)

அங்கவ னிருக்கை புக்கான் கண்டில னவித்த பாசப்
புங்கவ ருலகு மேனோர் பதவியும் புவன மூன்றில்
எங்கணுந் துருவிக் காணா னெங்குற்றான் குரவ னென்னுஞ்
சங்கைகொண் மனத்த னாகிச் சதுர்முக னிருக்கை சார்ந்தான்.

     (இ - ள்.) அவன் இருக்கை புக்கான் - அக்குரவன் இருப்பிடத்திற்
சென்று, அங்கு கண்டிலன் - அங்குக் காணாதவனாய், அவித்த பாசம்
புங்கவர் உலகும் - பாசங்களைக் கெடுத்த முனிவர்களுலகத்திலும், ஏனோர்
பதவியும் - மற்றையேதர் இருப்பிடங்களிலும், புவனம் மூன்றில்
எங்கணும் -