மூன்று உலகத்துமுள்ள
எல்லாவிடங்களிலும், துருவிக்காணான் - தேடியுங்
காணாதவனாய், குரவன் எங்கு உற்றான் என்னும் - ஆசிரியன்
எங்குற்றானோ என்னும், சங்கை கொள் மனத்தன் ஆகி - ஐயங்கொண்ட
மனத்தை யுடையவனாய், சதுர் முகன் இருக்கை சார்ந்தான் - சதுர்முகன்
இருப்பிடமாகிய சத்தியலோகத்தை அடைந்தான் எ - று.
புக்கான்
முதலியன முற்றெச்சங்கள். அவித்த பாசப் புங்கவர் என்றது
அருங்கேடன் என்பதுபோல நின்றது. (6)
துருவின னங்குங் காணான் றிசைமுகற் றொழுது தாழ்ந்து
பரவிமுன் பட்ட வெல்லாம் பகர்ந்தனன் பகரக் கேட்டுக்
குரவனை யிகழ்ந்த பாவங் கொழுந்துபட் டருந்துஞ் செவ்வி
வருவது நோக்கிச் சூழ்ந்து மலர்மக னிதனைச் சொன்னான். |
(இ
- ள்.) அங்கும் துருவினன் காணான் - அங்கும் தேடிக் காணா
தவனாய், திசைமுகன் தாழ்ந்து தொழுது பரவி - நான்முகனை வீழ்ந்து
வணங்கித் துதித்து, முன்பட்ட எல்லாம் பகர்ந்தனன் - முன் நிகழ்ந்த
வற்றை எல்லாம் எஞ்சாது கூறினான்; பகர - கூற, மலர்மகன் கேட்டு -
பிரமன் கேட்டு, குரவனை இகழ்ந்த பாவம் கொழுந்து பட்டு - குரவனை
இகழ்ந்ததனாலாகிய பாவமானது கொழுந்து விட்டோங்கி, அருந்து செவ்வி
வருவது நோக்கி - அவனை விழுங்குங் காலம் வருதலை யறிந்து, சூழ்ந்து
இதனைச் சொன்னான் - ஆராய்ந்து இதனைச் சொல்வானாயினன் எ - று.
கொழுந்து
படுதல் - கிளைத்தல். அண்ணாத்தல் செய்யாதளறு
என்புழிப் போல ஈண்டுப் பாவம் அருந்தும் என்றார்; நுகரப்படும்
எனினுமாம். வருவது : தொழிற்பெயர். (7)
அனையதொல் குரவற் காணு மளவுநீ துவட்டா வீன்ற
தனையன்முச் சென்னி யுள்ளான் றானவர் குலத்தில் வந்தும்
வினையினா லறிவான் மேலான் விச்சுவ வுருவ னென்னும்
இனையனைக் குருவாக் கோடி யென்னலு மதற்கு நேர்ந்தான். |
(இ
- ள்.) அனைய தொல குரவன் காணும் அளவும் - அந்தப்
பழமையான குரவனைக் காணும் வரையும், நீ துவட்டா ஈன்ற - நீ துவட்டா
வானவன் பெற்ற, தனையன் - புதல்வனும், முச்சென்றி உள்ளான் -
மூன்றுதலைகளையுடையவனும், தானவர் குலத்தில் வந்தும் - அசுரர்குலத்திற்
றோன்றியும், வினையினால் அறிவால் மேலான் - தொழிலாலும் அறிவாலும்
சிறந்தவனுமாகிய, விச்சுவ உருவன் என்னும் இனையனை - விச்சுவ
உருவனென்னும் பெயரையுடைய இவனை, குருவாக் கோடி என்னுலும் -
குரவனாகக் கொள்வாயாக என்று கூறலும், அதற்கு நேர்ந்தான் - அதற்கு
உடன்பட்டவனாய் எ - று.
தானவர்
- காசிபனுக்குத் தனு என்பாள் வயிற்றில் வந்தர். உம்மை
இழிவு சிறப்பு; எண்ணும்மைவிரிக்க. குருவா - தொகுத்தல். கோடி - கொள்
பகுதி : த் எழுத்துப் பேறு. நேர்ந்தான் : முற்று எச்சமாய் நின்றது. (8)
|