I


220திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



பார்வையால் நோக்கி, குலிச வேலால் தாக்கினான் - வச்சிரப் படையால்
மோதி, தலைகள் மூன்றும் - மூன்று தலைகளையும், தனித் தனி பறவை
யாகப் போக்கினான் - தனித் தனியே வெவ்வேறு பறவைகளாகப் போக்கி,
அலகை வாயில் - பேய்களின் வாய்களில், புலவுச் சோரி புகட்டினான் -
ஊனோடு கூடிய குருதியைப் புகச் செய்தான் எ - று.

     வேறாய் - வேறாக : எச்சத்திரிவு. ஓதி - ஞானம். நோக்கினான்
முதலியவற்றை எச்சமாகக் கொள்க. சோமபானஞ் செய்யுமுகம் காடை
யாகியும், சுராபானஞ் செய்யுமுகம் ஊர்க்குருவி யாகியும், அன்னபானங்
கொள்ளுமுகம் சிச்சிலியாகியும் பறந்தனவென வட நூல் கூறுமென்ப.
புகட்டினான், புகட்டு : பகுதி; புகவிடு என்பதன் மரூஉ. (11)

தெற்றெனப் பிரம பாவஞ் சீறிவந் தமரர் வேந்தைப்
பற்றலு மதனைத் தீர்ப்பான் பண்ணவர் மரமேன் மண்மேற்
பொற்றொடி யார்மே னீர்மேல் வேண்டினர் புகுத்த லோடும்
மற்றவ ரிஃதியாந் தீர்க்கும் வண்ணம்யா தென்ன விண்ணோர்.

     (இ - ள்.) தெற்றென - விரைவாக, பிரமபாவம் - பிரமக்கொலைப்
பாவமானது, சீறி வந்து - முனிந்து வந்து, அமரர் வேந்தைப் பற்றலும் -
தேவர்க் கரசனைப் பற்றியவுடனே, அதனைத் தீர்ப்பான் - அதனை நீக்கும்
பொருட்டு, பண்ணவர் வேண்டினர் - தேவர்கள் விரும்பினவர்களாகி,
மரமேல் மண்மேல் பொன் தொடியார் மேல் நீர்மேல்புகுத்த லோடும் -
மரங்களின் மேலும் பூமியின் மேலும் பொன்னாலாகிய வளையலையணிந்த
மகளிர்மேலும் நீர்மேலும் கூறுசெய்து புகுத்திய வுடனே, அவர் இஃது யாம்
தீர்க்கும் வண்ணம் யாது என்ன - அவர்கள் இதனை யாங்கள் நீக்கும்
வகை எவ்வாறு என்று கேட்க, விண்ணோர் - தேவர்கள் எ - று.

     புகுத்தல் - புகச்செய்தல், இருதிணையும் விரவிச் சிறப்பால் உயர்
திணை முடிவு பெற்றன; வழுவமைதி; பிறவற்றைத் தெய்வமாகக் கருதி
உயர்திணையாற் கூறினாரென்னலுமாம். (12)

அப்பிடை நுரையாய் மண்ணி லருவருப் புவரா யம்பொற்
செப்பிளங் கொங்கை யார்பாற் றீண்டுதற் கரிய பூப்பாய்க்
கப்பிணர் மரத்திற் காலும் பயினதாய்க் கழிக வென்றார்
இப்பழி சுமந்த வெங்கட் கென்னல மென்றார் பின்னும்.

     (இ - ள்.) அப்பு இடை நுரையாய் - நீரினிடத்து நுரையாகியும்,
மண்ணில் அருவருப்பு உவராய் - நிலத்தினிடத்து அருவருக்கத் தக்க
உவராகியும், அம்பொன் செப்பு இளங் கொங்கையார் பால் - அழகிய
பொன்னாலாகிய சிமிழை ஒத்த இளமையான கொங்கைகளையுடைய
மகளிரிடத்து, தீண்டுதற்கு அரிய பூப்பாய் - தீண்டுதற்காகாத பூப் பாகியும்,
கப்பு இணர் மரத்தில் - கிளைகளையும் பூங்கொத்துக்களையு முடைய
மரங்களிடத்து, காலும் பயின் ஆய் - கசிந்தொழுகும் பிசினாகியும், கழிக
என்றார் - நீங்குக என்று கூறினார்; பின்னும் - மீளவும், இப்பழி சுமந்த
எங்கட்கு என் நலம் என்றார் - இப்பழியைத் தாங்கிய எங்களுக்கு என்ன
பயன் என்று அந்நால்வரும வினவினார் எ - று.