அருவருப்பு
- இழந்தவற்றாலுளதாகும் மனம் பொருந்தாத் தன்மை. கப்பு,
கவர்ப்பு என்பதன் மரூஉ. பயினது, அது : பகுதிப் பொருள் விகுதி. (13)
[-
வேறு]
|
கருவின் மாதர் கருவுயிர்க்கு மளவு முறையாற் கணவர்தோண்
மருவி வாழக மண்ணகழ்ந்த குழியு மதனால் வடுவொழிக
பொருவி னீரு மிறைத்தோறு மூறிப் பொலிக மரங்குறைபட்
டொருவி னாலுந் தழைகவென வொழியா நலனு முதவினார். |
(இ
- ள்.) கருவின் மாதர் - சூலினையுடைய மகளிர், கரு உயிர்க்கும்
அளவும் - அக்கருப்பத்தை ஈநும் வரையிலும், முறையால் கணவர் தோள்
மருவி வாழ்க என - முறைப்படி தங்கணவரின் தோளைச் சேர்ந்து வாழக்
கடவர் என்றும், மண் அகழ்ந்த சூழியும் - மண் தோண்டிய குழியும், அதனால்
வடு ஒழிக என - அம் மண்ணினாலேயே வடுவொழிந்து நிரம்பக் கடவது
என்றும், பொருவு இல் நீரும் - ஒப்பில்லாத நீரும், இறைத்தோறும் -
இறைக்குந் தோறும், ஊறிப் பொலிக என - ஊறி விளங்கக் கடவது என்றும்,
பொருவு இல் நீரும் - ஒப்பில்லாத நீரும், இறைத்தோறும் - இறைக்குந்
தோறும், ஊறிப் பொலிக என - ஊறி விளங்கக் கடவது என்றும், மரம்
குறைபட்டு ஒருவினாலும் - மரம் வெட்டுண்டு வளங்குன்றினாலும், தழைக என
- தழையக் கடவது என்றும், ஒழியா நலனும் உதவினார் - என்றும் நீங்காத
பலனையும் அளித்தார்கள் எ - று.
கருவுயிர்த்தல்
- மகப்பெறுதல் அதனால் - தானே யென்னலுமாம். இறைக்குந்தோறும் என்பது விகாரமாயிற்று,
ஒருவுதல் - வெட்டுண்ட துண்டு நீங்குதலுமாம். மூன்று செய்யுளிலும் நாக்கும் முறை பிறழக்
கூறப்பட்டன; செய்யுளாகலின். இவற்றுட் கூறியன புனைந்துரை வழக்கெனக் கொள்க. (14)
மாசிற் கழந்த
மணியேபோல்
வந்த
பழிதீர்ந் திந்திரனுந்
தேசிற் றிகழத் துவட்டாதன்
செல்வன்
றன்னைத் தேவர்பிரான்
வீசிக் குலிசத் துயிருண்ட
விழுமங்
கேட்டு வெகுண்டுயிர்த்துக்
கூசிப் பழகோள் கருதியொரு
கொடிய
வேள்வி கடிதமைத்தான். |
(இ
- ள்.) மாசில் கழிந்த மணியேபோல் - குற்றத்தினின்றும் நீங்கிய மாணிக்கத்தைப்போல்,
வந்த பழி தீர்ந்து இந்திரனும் தேசில் திகழ -
அடைந்த பாவமானது நீங்கப்பெற்று இந்திரனும் ஒளியோடு விளங்க, துவட்டா - துவட்டாவானவன்,
தன் செல்வன் தன்னை - தன் புதல்வனாகிய விச்சுவ
உருவனை, தேவர்பிரான் - தேவேந்திரன், குலிசத்து வீசி உயிர் உண்ட
விழுமம் கேட்டு - வச்சிரப்படையால் ஓச்சி (அவன்) உயிரைப் பருகிய துன்பச்
செய்தியைக் கேட்டு, வெகுண்டு - கோபித்து, உயிர்த்து -
|