பெருமூச் செறிந்து,
கூசி - மனங் கூசி, பழி கோள் கருதி - பழிவாங்குதலை
யெண்ணி, ஒரு வேள்வி கடிது அமைத்தான் - ஒரு வேள்வியை விரைந்து
செய்தான் எ - று.
குலிசத்தால்
வீசி யென்க. விழுமம் - துன்பம்; ஈண்டு துன்பச் செய்தி.
கூசுதல் - பரிபவத்திற்கு நாணுதல். கோள் : முதனிலைதிரிந்த தொழிற்பெயர்.
(15)
அந்தக் குண்டத் தெரிசிகைபோ
லழலுங்* குஞ்சி யண்டமுக
டுந்தக் கொடிய தூமம்போ
லுயிர்த்துச் செங்கண் சினச்செந்தீச்
சிந்தப் பிறைவா ளெயிறதுக்கித்
திசைவான் செவிடு படநகைத்து
வந்தக் கொடிய விடம்போல
வெழுந்தா னொருவாண் மறவீரன். |
(இ
- ள்.) அந்தக் குண்டத்து - அந்த வேள்விக் குண்டத்தினின்றும்,
எரிசிகைபோல் அழலும் குஞ்சி - எரிகின்ற தீயின் கொழுந்து போலச்
செந்நிறத்தால் விளங்கும் முடியானது, அண்டம் முகடு உந்த -
அண்டத்தினுச்சியைத் தாக்க, கொடிய தூமம்போல் உயிர்த்து - கொடிய
புகைபோல மூச்செறிந்து, செங்கண் - சிவந்த கண்கள், சினச் செந்தீ சிந்த -
கொடிய கோபத்தீயைச் சிதற, பிறைவாள் எயிறு அதுக்கி - பிறைபோல்
வளைந்த ஒள்ளிய பற்களைக் கடித்து, திசை வான் செவிடுபட நகைத்து -
திக்குகளும் வானமும் செவிடுபடும்படி சிரித்து, வந்த அக் கொடிய
விடம்போல - கடலினின்றும் தோன்றிய அந்த ஆலால விடம்போல, ஒரு
வாள் மற வீரன் - ஒரு வெற்றியை யுடைய வாட்படையை யேந்திய வீரன்,
எழுந்தான் - தோன்றினான் எ - று.
அழலல்
- ஈண்டு விளங்குதல். வாள் - கொடுமையுமாம். எயிறதுக்கி -
எயிற்றால் இதழையதுக்கி யென்னலுமாம். வந்த என்னும் பெயரெச்சத்தகரம்
தொக்கது. அகரச் சுட்டு மிகுதிமேல் நின்றது. மறவீரம் - மறமாகிய வீரம்;
மறத்தையுடைய வீரன் எனக்கொண்டு, வீரன் பெயர்மாத்திரையாய் நின்ற
தென்னலுமாம். (16)
[கலிவிருத்தம்]
|
ஈங்குவன்
விருத்திர னென்ப வாரழற்
றூங்குவன் கணைவிடு தூர நீண்டுநீண்
டோங்குவ னோங்குதற் கொப்ப வைகலும்
+வீங்குவ னறினிலார் வினையி னெ்னபவே. |
(இ
- ள்.) ஈங்கு உவன் - இங்குத் தோன்றிய இவனையே, விருத்திரன்
என்ப - விருத்திராசுரன் என்று சொல்லுவர், ஆர் அழல் தூங்கு - நிறைந்த
(பா - ம்.) * சிகை நின்றழலும். +வீங்குவன்றனிலரா;
றனிலறா.
|