I


இந்திரன் பழிதீர்த்த படலம்223



தீத்தங்கிய, வன்கணை விடு தூரம் - வலிய அம்பு விடுகின்ற தூரம் வரை,
நீண்டு நீண்டு ஓங்குவன் - (ஒவ்வொரு நாளும்) நீண்டு நீண்டு உயருவான்;
ஓங்குதற்கு ஒப்ப - அங்ஙனம் உயருதற்கேற்ப, வைகலும் - நாடோறும்,
அறன் இலார் வினையின் - அறவினை இல்லாதார் பாவம்போல, வீங்குவன்
என்ப - பருப்பான் என்று சொல்லுவர் எ - று.

     உவன் என்னுஞ் சுட்டுச் சேய்மை அண்மை யிரண்டிடத்தையுங்
குறிக்கும்; ஈண்டு அண்மைக் காயிற்று. ஆரழல் - தீண்டுதற்கரிய அழலுமாம்.
கணை விடுதூரம் - வில்லினின்றும் விடப்பட்ட கணை செல்லுந் தூரம்.
அடுக்கு விரைவு குறித்தது. இறுதியினின்ற என்ப; அசையுமாம். ஏ : ஈற்றசை.
(17)

வீங்குடல் விருத்திரன் றன்னை விண்ணவர்
ஏங்குற வருதுவட் டாவெ னும்பெயர்த்
தீங்குறு மனத்தினோன் றேவர் கோனுயிர்
வாங்குதி பொருதென வரவிட் டானரோ.

     (இ - ள்.) துவட்டா எனும் பெயர் - துவட்டா என்ற பெயரையுடைய,
தீங்கு உறுமனத்தினோன் - தீமைமிக்க மனத்தினையுடையவன், விண்ணவர்
ஏங்குற வரு - தேவர்கள் வருந்தும்படி தோன்றிய, வீங்கு உடல் விருத்திரன்
தன்னை - பருத்த உடலையுடைய விருத்திராசுரனை, தேவர் கோன் உயிர் -
தேவேந்திரன் உயிரை, பொருது வாங்குதி என - போர் செய்து வாங்குவாயென்று, வரவிட்டான் - ஏவினான் எ - று.

     அரோ : அசை. (18)

மதித்துணி யெயிற்றினோன் வடவை போற்சினை இக்*
கொதித்தெதிர் குறுகினான் கொண்ட லூர்தியும்
எதிர்த்தனன் களிற்றின்மே லிமயத் துச்சிமேல்
உதித்ததோர் கருங்கதி ரொக்கு மென்னவே.

     (இ - ள்.) துணிமதி எயிற்றினோன் -பிறைச் சந்திரனை ஒத்த வளைந்த
பற்களையுடைய விருத்திரன், வடவைபோல்சினைஇ - வடவைத் தீயைப்போல்
வெகுண்டு, கொதித்து - துள்ளி, எதிர் குறுகினன். போர் முனையில் வந்தான்;
கொண்டல் ஊர்தியும் - மேகவாகனனாகிய இந்திரனும், இமயத்து உச்சிமேல் -
பனி மலையின் சிகரத்தில், உதித்தது ஓர் கருங் கதிர் ஒக்கும் என்ன -
தோன்றியதாகிய ஒரு கரிய ஞாயிறு போலும் என்று சொல்லுமாறு,
களிற்றின்மேல் எதிர்த்தனன் - வெள்ளை யானையின் மேலேறி எதிர்த்தான்
எ - று.

     வடவை - பெண் குதிரை; கடல் நாப்பண் இருக்கும் ஊழித்தீ பெண்
குதிரையின் முகம் போலும் வடிவினதாகலின் வடவா முகாக்கினி யெனப்படும்; இது குறைந்து வடவை யெனவும் நிற்கும். சினைஇ - சினந்து : சொல்லிசை
நிறைக்கும் அளபெடை. கொண்டலாகிய ஊர்தியையுடையன் என


     (பா - ம்.) * வடவை போற்றின் ன.