அன்மொழித் தொகையை
விரிக்க. வெள்ளை யானையின் மேலிருக்கும் கரிய
நிறமுடைய இந்திரனக்குப் பனி மலை மேலுதித்த கருஞாயிறு உவமம். இஃது
இல்பொருளுவமை யணி. (19)
அறத்தொடு
பாவநேர்ந் தென்ன வார்த்திரு
திறத்தரு மூண்டமர் செய்யக் கற்சிறை
குறைத்தவன் றகுவன்மேற் குலிச வேலெடுத்
துறைத்திட வீசினா னுடன்று கள்வனும். |
(இ
- ள்.) அறத்தொடு பாவம் நேர்ந்தது என்ன - அறமும் பாவமும்
எதிர்ந்தாற்போல, ஆர்த்து - ஆரவாரித்து, இருதிறத்தரும் - இரண்டு
பகுதியாரும், மூண்டு அமர் செய்ய - எதிர்ந்து போரினைச் செய்ய, கல் சிறை
குறைத்தவன் - மலைகளின் சிறையை அறுத்தவனாகிய இந்திரன்,
தகுவன்மேல் - அசுரனாகிய விருத்திரன் மேல், குலிசவேல் எடுத்து
உறைத்திட வீசினான் - வச்சிரப் படையை எடுத்து உறைக்கும் படி வீசினான்;
கள்வனும் உடன்று - விருத்திரனும் சினந்து எ - று.
ஒடு
: எண்ணொடு; நேர்ந்தது. விகாரமாயிற்று. நேர்ந்தென்பதற்கேற்ப
மூண்டு என்பதற்கு எதிர்ந்து எனப்பொருளுரைக்கப்பட்டது, சின மூண்டு
என்றுமாம். வானவனும தானவனும் என்பது தோன்ற இருவரென்னாது இரு
திறத்தரும் என்றார்; படைகளை உளப்படுத்தியுமாம். வானவனக்கு அறமும்,
தானவனுக்குப் பாவமும் உவமம். அறமும் பாவமும் உருவெடுத்து எதிர்ந்தாற்
போல என்றுமாம். தகுவன் - அசுரன். குலிசவேல் : இருபெயரொட்டு (20)
இடித்தனன் கையி* லோ ரிருப்பு லக்கையைப்
பிடித்தனன் வரையெனப் பெயர்ந்து தீயெனத்
துடித்தனன் சசிமுலைச் சுவடு தோய்புயத்
தடித்தன னிந்திர னவச மாயினான். |
(இ
- ள்.) இடித்தனன் - ஆரவாரித்து, ஓர் இருப்பு உலக்கையை
கையில் பிடித்தனன் - ஒரு இருப்புலக்கையை்க் கரத்திற்றாங்கி, வரை யெனப்
பெயர்ந்து - மலைபோல அடிபெயர்ந்து, தீ எனத் துடித்தனன் - தீப்போலத்
துள்ளி, சசிமுலைச் சுவடுதோய் புயதது அடித்தனன் - இந்திராணியின்
தனச்சுவடு பொருந்திய தோளின்கண் தாக்கினான்; இந்திரன் அவசம்
ஆயினான் - இந்திரன் மூர்ச்சையானான் எ - று.
இடித்தனன்
முதலிய மூன்றும் முற்றெச்சம். வரை பெயர்தல் போலப்
பெயர்ந்து என விரிக்க : இல்பொருளுவமை.
அடித்தனன் என்பதனுடன்
ஆக என்னும் இடைச்சொற் கூட்டி எச்சப்படுத்தலுமாம். அவசம் -
வசமிழத்தல். (21)
அண்டரே றனையவ னவச மாறிப்பின்
கண்டகன் கைதவ நினைந்திக் கள்வனேர்
மண்டம ராற்றுவான் வலியி லோமெனப்
புண்டரீ கத்தவ னுலகிற் போயினான். |
(பா
- ம்.) * எடுத்தனன் கையில்.
|